சாகித்திய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுடன் வாசகர் வட்டம் இலக்கிய அமைப்பு 'ஜூம்' செயலிவழி உரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஜூம் வழி இந்த உரையாடல் இடம்பெறும்.
தமிழின் தற்கால சிறந்த எழுத்தாளர் களுள் ஒருவராகக் கருதப்படும் சி. கல்யாணப்பெருமாள், வண்ணதாசன் எனும் பெயரில் புனைவையும் கல்யாண்ஜி எனும் புனைப்பெயரில் கவிதைகளையும் எழுதி வருகிறார். 'ஒரு சிறு இசை' என்ற இவரது சிறுகதை நூலுக்கு இந்திய அரசாங்கம் 2016ஆம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருதை வழங்கியது.
கலந்துரையாடலில் கலந்துகொள்ள:
https://nlbsingapore.zoom.us/j/9736771 1747?pwd=M2dGZ1BnQUFRVDlKQU wraFV3L01QQT09
ஜூம் சந்திப்பு எண்கள்: 973 6771 1747
மறை எண்கள்: 065727