எஸ்.ஜே. சூர்யாவுக்கு அமோக வரவேற்பு; ரசிகர்கள் திரண்டனர்

எஸ்.ஜே. சூர்யாவுக்கு அமோக வரவேற்பு; ரசிகர்கள் திரண்டனர்

2 mins read
6bdaa6ee-dc3e-47b9-a163-b5461ac92c53
-

லிட்­டில் இந்­தி­யா­வுக்கு வருகை தந்­தி­ருந்த திரைப்­பட கலை­ஞர் எஸ்.ஜே. சூர்­யா­வைக் காண நேற்று மக்­கள் திரண்­ட­னர். சிங்கப்பூர் ரசிகர்கள் அவர்மீது பேரன்பு பொழிந்தனர். முன்­கூட்­டியே அவ­ரது வருகை குறித்து கேள்­விப்­பட்ட ஒரு சிங்­கப்­பூர் மலாய் ரசி­கர் தன்னை சமூக ஊட­கம் வாயி­லாக தொடர்­பு­கொண்டு, அவ­ரைக் காணும் வாய்ப்­பைத் தவ­ற­விட்­ட­தில் வருத்­தம் தெரி­வித்­த­தாக குறிப்­பிட்­டார் எஸ்.ஜே சூர்யா.

மாநாடு திரைப்­ப­டத்­தில் இடம்­பெ­றும் பிர­பல தமிழ் வச­னத்தை அவ்­வி­ளம் ரசி­கர் நடித்­துக்­காட்­டும் காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வ­லாகி வரு­கிறது. அக்­கா­ணொளி தன் மனதைத் தொட்­ட­தாக அவர் கூறி­னார்.

இவ்­வ­கை­யில், இயக்­கு­ந­ராக இருந்த காலத்­தில் தொடங்கி, நடி­க­ரா­க­வும் இசை­ய­மைப்­பா­ள­ர­க­வும் பரி­மா­ணம் கண்­டது வரை அதிக வர­வேற்பு தந்­துள்ள சிங்­கப்­பூர் மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தார், தமிழ் முர­சி­டம் பேசிய எஸ்.ஜே. சூர்யா.

அண்­மை­யில் வெளி­வந்து திரை­யு­ல­கின் பாராட்­டைப் பெற்ற 'வதந்தி' எனும் இணை­யத் தொட­ரில் அவர் நடித்­தி­ருந்­தார். கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் அமே­சான் பிரை­மின் ஆக பிர­பல தொட­ராக சிங்­கப்­பூ­ரில் அது உயர்ந்­த­தை­யும் குறிப்­பிட்டு, தனது வெளி­நாட்டு ரசி­கர்­களில் சிங்­கப்­பூர் மக்­கள் முக்­கிய பங்கு வகிப்­ப­தா­க­வும் ஆத­ர­வ­ளிப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

2000ஆம் ஆண்­டில் எஸ்.ஜே. சூர்­யா­வின் இயக்­கத்­தில் நடி­கர்­கள் விஜய்-ஜோதிகா நடித்­தி­ருந்த குஷி திரைப்­ப­டம் வெளி­யா­னது. சிங்­கப்­பூர் மக்­க­ளி­டையே அதன் வர­வேற்பைக் காண இங்கு நேர­டி­யாக வந்த எஸ்.ஜே. சூர்யா, அப்போது உள்­ளூர் திரை­ய­ரங்­கு­க­ளுக்குச் சென்­றி­ருந்­தார். அதை தொடர்ந்து, அவர் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வது இது நான்­கா­வது முறை.

தற்­போது திரைத்­து­றை­யில் பர­ப­ரப்­பாக இயங்கி கொண்­டி­ருக்­கி­றார் எஸ்.ஜே. சூர்யா. பொம்மை, மார்க் ஆண்­டனி, இயக்­கு­நர் ஷங்­க­ரின் ஆர்சி15 ஆகிய படங்­களில் தற்­போது நடித்து வரு­கி­றார். 2015ல் வெளி­வந்த 'இசை' திரைப்­ப­டத்­துக்­குப் பின்­னர் நடிப்­பில் முழு வீச்­சாக இறங்­கிய எஸ்.ஜே. சூர்யா மீண்­டும் 'கில்­லர்' திரைப்­ப­டம் மூலம் இயக்­கத்­திற்­கும் திரும்­பு­கி­றார். திரைப்­பட நடி­க­ரா­வது எஸ்.ஜே. சூர்­யா­வின் நீண்­ட­நாள் கன­வாக இருந்து வந்­துள்­ளது, அதாவது, அவர் திரைத்­து­றை­யில் அடி­யெ­டுத்து வைத்த நாளி­லி­ருந்தே.

இதனைப் பல்­வேறு இடங்­களில் வலி

­யு­றுத்தி உள்ள அவர், எல்லாப் பரி­மா­ணங்­

க­ளை­யும்­விட நடி­கர் எனும் பரி­மா­ணமே மன­துக்கு நெருக்­க­மா­னது என தெரி­வித்­தார்.

"நடி­க­ரா­வ­தற்கு உகந்த இயக்­கு­ந­ரும் தயா­ரிப்­பா­ள­ரும் அமை­வது முக்­கி­யம். அவை அமை­யாத கார­ணத்­தி­னால் நானே இப்­ப­ரி­மா­ணங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது," என்­றார் அவர். எஸ். ஜே. சூர்யா இயக்­கு­ந­ராக உரு­வெ­டுத்த முதல் படம், அஜித்-சிம்­ரன் நடித்து 1999ல் வெளி­வந்த வாலி. இப்­ப­டத்­துக்­கான இந்தி மொழி உரி­மை­க­ளைப் பெற தயா­ரிப்­பா­ளர் போனி க­பூர் முயற்சி செய்த சம­யத்­தில், எஸ். ஜே. சூர்யா சட்­டப்­பூர்வ நட­வ­டிக்கை எடுப்­பார் எனும் வதந்தி நில­வி­யது. அவ­ரின் சொந்த இயக்­கத்­தில் வாலி­யின் இந்தி மொழி மறு­ப­திப்பை எதிர்­பார்க்­க­லாமா எனும் கேள்­விக்கு சாத்­தி­ய­முண்டு என்­ற­ள­வில் பதி­ல் அளித்­தார் எஸ்.ஜே. சூர்யா.