நச்சு நீக்கும் உணவுகளால் நன்மை இல்லை: வல்லுநர்கள்

நச்சு நீக்கும் உணவுகளால் நன்மை இல்லை: வல்லுநர்கள்

2 mins read
5663d1fd-3e6a-4e50-a5ba-dd0fe8d2fb68
-

உட­லில் உள்ள நச்­சு­களை அகற்ற உத­வு­வ­தா­க­வும் எளி­தான முறை­யில் எடை­யைக் குறைக்­க­வும் எதிர்ப்­பு­சக்­தி­யைப் பெருக்­க­வும் வழி­வ­குப்­ப­தா­க­வும் சில வகை உண­வுப் பொருள்­கள் விற்­கப்­ப­டு­வது நாம் அறிந்­ததே.

பழ­ர­சம், கூழ் எனப் பல வடி­வங்­களில் 'நச்சு நீக்கும்' உணவுப் பொருள்கள் கிடைக்­கின்­றன. இவற்­றைப் பயன்­ப­டுத்­து­வ­தால் உட­லில் இருந்து உண்­மை­யி­லேயே நச்­சு­களை அகற்ற முடி­யுமா என்ற கேள்­விக்கு, "பெரி­தாக இல்லை," என்­பதே வல்­லு­நர்­க­ளின் பதில்.

இத்­த­கைய உண­வுப்­பொ­ருள்­களின் செயல்­தி­ற­னுக்கு அறி­வி­யல்­பூர்­வ­மான ஆதா­ரம் ஏது­மில்லை என்­பதை அவர்­கள் சுட்டு­கின்­ற­னர்.

பெரும்­பா­லும் இந்த உண­வுப்­பொ­ருள்­கள் விலங்­கு­க­ளி­டம் சோதிக்­கப்­பட்­ட­வை­யாக இருக்­கின்­றன. அல்­லது இவற்­றின் தயா­ரிப்­பா­ளரே இவை குறித்த ஆய்­வு­க­ளுக்கு நிதி­ய­ளிக்­கி­றார்.

மனி­தர்­க­ளி­டம் இத்­த­கைய உண­வுப்­பொ­ருள்­க­ளின் பாதிப்பு குறித்து வெகு­சில ஆய்­வு­களே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

"நச்­சு­களை நீக்­கும் ஆற்­றல் இயற்­கை­யா­கவே மனித உட­லுக்கு உண்டு. இதற்­கு, சிறப்பு உண­வுப்­பொ­ருள் எதை­யும் உண்­ணத் தேவை­யில்லை," என்­கின்­ற­னர் வல்­லு­நர்­கள்.

ஒவ்­வொரு நாளும் நமது குடல், கல்­லீ­ரல், சிறு­நீ­ர­கம், தோல் ஆகி­யவை உடலில் இருந்து நச்­சு­க­ளை­யும் கழி­வு­களை­யும் வெளி­யேற்­று­கின்­றன. இவற்­றுக்­கெல்­லாம் சிறப்பு உண­வுப்­பொ­ருள் எது­வும் தேவைப்­ப­டு­வ­தில்லை என அவர்­கள் எடுத்­து­ரைத்­த­னர்.

சிலர் குறு­கிய காலத்­தில் உடல் எடை­யைக் குறைக்­கும் நோக்­கில் 'நச்சு நீக்­கும்' உண­வுப் பொருள்­களை நாடு­கின்­ற­னர். உட்­கொள்­ளும் கலோ­ரி­க­ளின் அளவு குறை­வ­தால் எடை குறை­யும். ஆனால் அவர்­கள் மீண்­டும் வழக்­க­மான உணவை உட்­கொள்­ளத் தொடங்­கும்­போது உடல் எடை மீண்­டும் கூடு­கிறது.

பழங்­கள், காய்­க­றி­கள் என சில நாள்­கள் உண்­ப­தால் உட­லின் எதிர்ப்பு ஆற்­றல் கூடு­வது உண்­மை­தான். ஆனால் மீண்­டும் வழக்­க­மான உண­வு­மு­றைக்­குத் திரும்­பு­கை­யில் எதிர்ப்பு சக்தி பழைய நிலைக்கே திரும்­பு­கிறது என்று வல்­லு­நர்­கள் கூறி­னர்.

அடிக்­கடி இந்த உண­வுப் பொருள்­களை மட்­டும் உண்­ப­தால் உட­லுக்­குத் தேவை­யான ஊட்­டச்­சத்தை இழக்­கும் அபா­யம் குறித்து அவர்­கள் எச்­ச­ரித்­த­னர். இத­யம், சிறு­நீ­ர­கம் போன்­றவை செய­லி­ழக்­க­வும் இது கார­ண­மா­கக்­கூ­டும். மாறாக ஆரோக்­கி­ய­மான உணவு, உடற்­ப­யிற்சி இவையே நீண்­ட­கா­லப் பலனை அளிக்­கு­மென அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

படம்: இணையம்