கருணாநிதி துர்கா
புதிய நடவடிக்கைகளையும் நிகழ்ச்சிகளையும் தேசிய மரபுடைமைக் கழகம் அறிமுகப்
படுத்துகிறது.
இந்த நடவடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெறுகின்றன.
இம்மாதப் பள்ளி விடுமுறையின்போது மாணவர்கள் மரபுடைமையைப் பற்றி தெரிந்துகொள்ளவும் விடுமுறை காலத்தை மகிழ்ச்சியாக கழிக்கவும் இந்த நடவடிக்கைகள் வகை செய்கின்றன,
அதே நேரத்தில், பெற்றோர்இந்த நிகழ்ச்சிகளின் மூலம் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடலாம்.
இதன்மூலம், குடும்பப் பிணைப்பு வலுப்படும் என்று கழகம் கூறியது.
மரபுடைமை தொடர்பான இந்த நடவடிக்கைகளில் பொது மக்கள் கலந்துகொள்ளலாம். அனைத்து வயதினருக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நெசவு மூலம் கைவினை,
வடிவமைப்பு அனுபவம் பெறுதல்
தேசிய வடிவமைப்பு நிலையத்தில் இம்மாதம் 18ஆம் தேதியன்று குடும்பங்களுக்கான கைவினைப் பட்டறை நடத்தப்படும். 4 வயது முதல் 9 வயது வரையிலான சிறுவர்களுடன் பெற்றோர் முன்பதிவு செய்து இலவசமாக இந்த நடவடிக்கையில் பங்குபெறலாம்.
மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுவகைகளில் கெத்துப்பாட்டும் ஒன்று. தென்னை ஓலையைக் கொண்டு கெத்துப்பாட்டை எவ்வாறு வடிவமைப்பது என்பதை இந்நடவடிக்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம். நேரம்: காலை மணி 10 - 11.30
'செலப்பிரெட் மொனியுமென்ட்ஸ்!'
செயிண்ட் ஜோசஃப் தேவாலயத்தில் அடுத்த மாதம் 1, 15, 21, 28ஆம் தேதிகளில் சிறப்பு சுற்றுப்பயணம் ஒன்று நடத்தப்படும். சிங்கப்பூரின் பழமையான தேவாலயமான செயிண்ட் ஜோசஃப் தேவாலயம் இந்
நிகழ்ச்சிக்கு முக்கிய நினைவுச்சின்னமாகக் கருதப்படுகிறது.
பெரியவர்கள் $5 கட்டணமும் மூத்த குடிமக்கள், மாணவர்கள் $3 கட்டணமும் செலுத்தி சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சி வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படும்.
இம்மாதப் பள்ளி விடு
முறையை முன்னிட்டு சிங்கப்பூர் சிறார் அருங்காட்சியகத்தில் இம்மாதம் 11ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பல நடவடிக்கைளுக்கு ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளன. இம்மாதம் 31ஆம் தேதி வரை அருங்காட்சியகத்திற்கு இலவசமாகச் செல்லலாம்.
'ஆர்ட் வியுவிங்'
சிங்கப்பூர் குழந்தைகள் அருங்காட்சியகத்தின் 'டிஸ்கவரி' அறையில் ஓவியக் கண்காட்சிக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 வயது முதல் 6 வயது வரையிலான சிறுவர்களுடன் பெற்றோர் முன்பதிவு செய்து $10 கட்டணம் செலுத்தி இந்தக் கண்காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.
பிள்ளைகளின் கண்ணோட்டம், சிந்தனையைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு ஏற்ற நடவடிக்கையாக இது அமையும்.
நேரம்: பிற்பகல் மணி 3 -
மாலை மணி 4
இதுபோன்று மேலும் பல நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் சிறார் அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவற்றுக்கு முன்பதிவு செய்ய www.go.gov.sg/cmsg எனும் இணையப்பக்கத்துக்குச் செல்லவும்.
சாங்கி தேவாலயம் மற்றும் அருங்காட்சியகம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றி ஆட்சி செய்தபோது போர்க் கைதிகள், பொதுமக்கள் சந்தித்த சவால்கள் ஆகியவற்றை
சித்திரிக்கும் கண்காட்சிக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியைக் காண சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசி
களும் கட்டணம் செலுத்த தேவையில்லை.
நேரம்: காலை மணி 9.30 - மாலை மணி 5.30

