திருக்குறள் விழாவை ஒட்டி மாணவர்களுக்குப் போட்டிகள்

திருக்குறள் விழாவை ஒட்டி மாணவர்களுக்குப் போட்டிகள்

2 mins read

தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கம் நடத்­தும் இவ்­வாண்­டின் திருக்­கு­றள் விழாவை முன்­னிட்டு பாலர் பள்ளி முதல் உயர்­நி­லை ஐந்தாம் வகுப்பில் பயி­லும் மாண­வர்­கள் வரைக்­கு­மான போட்­டி­கள் இடம்­பெ­ற­வுள்­ளன.

கழ­கத்­தின் திருக்­கு­றள் விழா ஏப்­ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடை­பெ­றும். தமிழ்­மொழி விழா­வின் ஒரு பகு­தி­யாக நடை­பெ­றும் இவ்­வி­ழா­விற்­கான போட்­டி­க­ளைக் கழ­கம் நேர­டி­யாக நடத்­த­வுள்­ளது.

இப்­போட்­டி­கள் வரும் ஞாயிற்றுக்­கி­ழமை மார்ச் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பீட்டி ரோட்டில் உள்ள உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் வெவ் வேறு நேரங்களில் நடத்தப்படும்.

பாலர் பள்­ளி­களில் மழ­லை­யர் வகுப்­பு­கள் ஒன்று, இரண்டு மாண­வர்­க­ளுக்கு வண்­ணம் தீட்­டும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலர் பள்ளி ஒன்றாம், இரண்டாம் வகுப்பு பாலர்களுக்கு மன­னப்­போட்­டி­கள் நடைபெறும்.

தொடக்­க­நிலை ஒன்று, இரண்டு வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான மனப்­பா­டம் செய்து பொரு­ளு­டன் ஒப்­பிக்­கும் போட்­டி­கள் நடை­பெ­றும்.

தொடக்­க­நிலை மூன்று, நான்கு வகுப்பு மாண­வர்­க­ளுக்கு மனப்­ பா­டம் செய்து பொரு­ளு­டன் ஒப்­பிக்­கும் போட்­டி­கள் நடத்தப்படும்.

தொடக்கநிலை ஐந்து, ஆறாம் வகுப்­பு மாண­வர்­களுக்கு ஒப்­பித்­தல் போட்டி, பேச்­சுப்­போட்டி ஆகி­ய­வை­யும் இடம்பெற இருக்கின்றன.

உயர்­நிலை ஒன்று முதல் ஐந்து வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்கு இரண்டு வெவ்­வேறு பிரி­வு­களில் பேச்­சுப் போட்­டி­கள் நடை­பெ­றும்.

போட்­டி­கள் நடை­பெ­றும் குறிப்­பிட்ட நேரத்­தை­யும் மேல்­வி­வ­ரங்­ க­ளை­யும் கீழ்க்காணும் இணை­ய­மு­க­ வ­ரி­யில் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

https://www.tamilmozhi.org/calendar_events_detail.php?id=34

கூடு­தல் விவ­ரங்­க­ளுக்­குத் தயவு செய்து கேத்­தி­ர­பா­லன் மூக்­காண்­டி­யு­டன் தொலை­பேசி எண் 9004 3427இலும் கார்த்­திக் சிதம்­ப­ரத்­து­டன் தொலை­பேசி எண் 9241 0109இலும் tirukkuralvizha@gmail.com என்ற மின்­னஞ்­சல் முக­வ­ரி­ யி­லும் கழ­கத்­தைத் தொடர்பு கொள்­ள­லாம்.

போட்­டி­க­ளுக்­கான பதி­வுத் தாள்­கள் தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்தை வந்து சேர­வேண்­டிய இறுதி நாள். மார்ச் 16ஆம் தேதி இரவு 11.59மணி ஆகும்.

செய்தி: தமிழ் மொழி

பண்­பாட்­டுக் கழ­கம்