அதிக நீர்ச்சத்துள்ள தர்ப்பூசணிப் பழம் பல நன்மைகளைத் தர வல்லது. உடலில் நீர்ச்சத்தை அது அதிகரிக்கும். குறைவான கலோரிகள் உள்ள அப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, பொட்டேசியம், மெக்னீசியம் போன்றவை ஏராளமாக இருக்கின்றன.
இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுக்குள் வைக்கவும் புற்று நோயை எதிர்க்கவும் இதற்கு ஆற்றல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தர்ப்பூசணியில் அழற்சியைக் குறைக்கும் ஆற்றல் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அதில் இரும்புச் சத்தும் அதிகமாக உள்ளது.
தர்ப்பூசணிப் பழசாற்றும் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். உடல் சூடு தணியும்.
தர்ப்பூசணியின் விதைகள் சிறுநீரகக் கற்களிலிருந்து காக்கும். ஒரு மேசைக்கரண்டி விதைகளை அரைத்து அதில் சிறிது வெந்நீரை ஊற்றி, சூடு தணிந்ததும் இதைக் குடிக்கலாம்.

