நல்ல தூக்கம் பெற சில எளிய வழிகள்

இன்று மார்ச் 17ஆம் தேதி உலக உறக்க நாள். தூக்­கம் போத­வில்லை என்­றால் உடல்­ந­லம், மன­நிலை, வேலை­யில் செயல்­ தி­றன் போன்ற பல அம்­சங்­கள் பாதிக்­கப்­படும். சில நல்ல பழக்க ­வ­ழக்­கங்­க­ளைக் கடை­ப்பி­டித்­தால் நிம்­ம­தி­யான தூக்­கம் வரும் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத் தூக்­கம் உடல்­ந­ல­னுக்கு உகந்­தது என்பது பல நிபு­ணர்­ களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கிறது. 2021இல் உல­க­மெங்­கும் உள்­ள­வர்­கள் சரா­ச­ரி­யாக 7.15 மணி நேரம் தூங்­கி­னர். ஆனால் சிங்­கப்­பூ­ரில் உள்­ள­வர்­கள் வார நாள்­களில் சரா­ச­ரி­யாக 6.6 மணி நேரம் மட்­டும் தூங்­கி­னர் என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறி­யுள்­ளன.

வார­நா­ளில் விட்ட தூக்­கத்­தைப் பிடித்­த­தால் ஏழு நாள் சரா­சரி 6.8 மணி நேரத் தூக்­க­மாக உயர்ந்­தது.

இதய நோய், புற்­று­நோய், சிறு­நீ­ரகப் பாதிப்பு, உயர் ரத்த அழுத்­தம், வாத நோய், உடல்­ ப­ரு­மன், மன அழுத்­தம் போன்ற பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தூக்­க­மின்­மை­யு­டன் தொடர்பு உள்­ளது.

நல்ல தூக்­கத்­தைப் பெற முத­லில் அதை ஒரு பிரச்­சி­னை­யா­கக் கருதி அதற்கு சிக்­க­லான தீர்வு ­க­ளைத் தேடி மன­பா­ரத்­தை ஏற்றிக்கொள்­ளா­மல் இருக்க வேண்­டும் என்று ‘தி ஸ்லீப் கோச்’ என்று அழைக்­கப்­படும் புகழ்­பெற்ற தூக்க நிபு­ணர் டிரேசி ஹேனி­கன் கூறி­னார்.

தூக்­கத்­தைத் தள்­ளிப் போடு­வதை நிறுத்த வேண்­டும் என்­பது நிபு­ணர்­கள் கூறும் முக்­கிய ஆலோ­சனை. நேரங்­கெட்ட நேரத்­தில் தூங்­கச் செல்­லா­மல் ஒரே நேரத்­தில் தூங்­கச் செல்ல வேண்­டும் என்று யேல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் குழந்தை தூக்க நிலை­யத்­தின் இயக்­கு­நர் கிரேக் கெனப்­பரி குறிப்­பிட்­டார்.

தூக்கம் வர ஏறத்­தாழ அரை மணி நேரம் எடுக்­கும் என்­ப­தால் அதை­யும் கணக்­கில் எடுத்­துக்­கொண்டு தூங்­கச்­செல்லும்படி அவர் பரிந்துரைத்தார்.

அதே­போல, ஒரே நேரத்­தில் எழு­வ­தும் முக்­கி­யம். வார­யி­று­தி­யில் கூடு­தல் நேரம் விழித்து இ­ருப்­ப­தும் தூங்­கு­வ­தும் பலருக்கு வாடிக்கை. ஆனால் தின­மும் ஒரே நேரத்­தில் தூங்கி எழுந்து உடல் அதற்­குப் பழ­கி­னால்­தான் தூக்­கம் நல்ல ஓய்­வைத் தரும். புத்­து­ணர்ச்­சி­யு­டன் எழ முடி­யும்.

சாதனங்களைத் தள்ளிவைக்கவும்

பல­ரும் தூங்­கச்­செல்­லும் முன்­னர் மடி­க்க­ணினி, கைப்பேசி, கைக்க­ணினி போன்­ற­வற்­றைப் பயன்படுத்­தா­மல், முடிந்­த­வரை அவற்­றைப் படுக்கை அறைக்­குள் எடுத்­துச் செல்­லா­மல் இருப்­பதே நல்­லது என்று திரு­வாட்டி ஹேனி­கன் சொன்­னார்.

தூங்­கும் நேரம் வரப்­போ­கிறது என்­பதை உட­லுக்­குத் தெரி­விக்க இரவு நேரங்­களில் இளைப்­பா­றும் நட­வ­டிக்­கை­க­களில் ஈடு­ப­டு­வது சிறந்­தது என்­றார் டாக்­டர் கெனப்­பரி. புத்­த­கம் படிப்­பது, வீட்­டில் இருக்­கும் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளி­டம் பேசு­வது போன்­ற­வற்­றுக்கு உகந்த நேர­மாக அதை மாற்­றிக்­கொண்டு ஒரு செய­லால் இரு பயன்­கள் பெற­லாம்.

அடுத்து, நல்ல தூக்­கத்­துக்கு உண­வுப் பழக்­கம் மிக முக்­கி­யம்.

தூங்­கச் செல்­வ­தற்கு முன்­னர் குறைந்­தது ஐந்து அல்­லது ஆறு மணி நேரத்­துக்கு கெஃபேனை உட்கொள்­ளா­மல் இருப்­பது தூக்­கத்­துக்கு உத­வும். கெஃபேனின் தாக்­கம் பல மணி நேரம் உட­லில் நீடித்து விழிப்­பு­டன் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

அதே­போல தூங்­கு­வ­தற்கு முன்­னர் நிறைய சாப்­பி­டு­வது, எளி­தில் செரிக்­காத உண­வு­ வகை­களை அல்­லது அதிக சீனி உள்ள உண­வு­வ­கை­கள் உட்­கொள்­வது நல்ல தூக்­கத்­துக்குப் பெரும் எதிரி. முடிந்­த­வரை தூங்கு­வ­தற்கு மூன்று மணி நேரத்­துக்கு முன்னர் உண்­பதைத் தவிர்க்கலாம் என்று டாக்டர் கெனப்பரி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!