நிலவுக்குச் செல்லும் வீரர்களுக்கு புதுவகை ஆடை தயார்

நிலவுக்குச் செல்லும் வீரர்களுக்கு புதுவகை ஆடை தயார்

2 mins read
548eaf2c-ab57-4022-a783-71b08cee51fb
-

ஹூஸ்­டன்: நீல் ஆர்ம்ஸ்­டி­ரோங் அறு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் நில­வில் காலெ­டுத்து வைத்­த­போது அணிந்த விண்­வெளி ஆடை­கள் பழசாகிவிட்­டது.

இன்­னும் இரண்டு ஆண்டு­களில் மீண்­டும் நில­வுக்­குச் செல்ல திட்­ட­மிட்­டுள்ள நாசா, தனது விண்­வெளி வீரர்­க­ளுக்­கென புதிய ஆடை­க­ளைத் தயா­ரித்­தி­ருக்­கிறது. ஆடை பற்­றிய சில விவ­ரங்­களை நாசா ஹூஸ்­ட­னில் உள்ள ஜான்­சன் விண்­வெளி நிலை­யத்­தில் நேற்­று­முன்­தி­னம் வெளி­யிட்­டது.

விண்­வெளி வீரர்­கள் நிலாத்­ த­ரை­யில் அறி­வி­யல் ஆய்­வு­களை மேற்­கொள்­ளத் தோவை­யான சிறப்பு அம்­சங்­கள் ஆடைக்­குள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. சுவாச இயந்­தி­ரங்­கள், விளக்­குகள், அதிக அழுத்­தத்­தைத் தாங்­கக்­கூ­டிய ஆற்­றல் போன்­ற­வை­யும் ஆடை­களில் இருக்­கும்.

நாசா அதன் விண்­வெளி ஆடை­க­ளைக் கடை­சி­யாக 1981இல் மேம்­ப­டுத்­தி­யது.

வரும் 2025இல் ஆர்­டெ­மிஸ் III திட்­டத்­தின்­கீழ் விண்­வெளி வீரர்­களை மீண்­டும் நில­வுக்கு அனுப்ப நாசா திட்­ட­மிட்டு வரு­கிறது. அதற்­குள் புதிய விண்­வெளி ஆடை­களை உரு­வாக்­கு­வது அதன் இலக்கு.

ஆர்­டெ­மிஸ் பய­ணத்­தில் பெண்­களை விண்­வெ­ளிக்கு அனுப்­பப் போவ­தாக நாசா கூறி­யி­ருந்­தது. ஆனால் பழைய ஆடை­கள் பெண்­க­ளுக்கு அள­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை. புதிய ஆடை பெண்­க­ளுக்­கும் பொருந்­தும் என்று நாசா கூறி­யது.

புதிய ஆடை­யு­டன் விண்­வெளி வீரர்­க­ளுக்­குப் புதிய தலைக்­க­வ­சங்­களும் கால­ணி­களும் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. தலைக்­க­ச­வத்­தில் காணொ­ளிக் கரு­வி­களும் கால­ணி­களில் நில­வின் குளி­ரைத் தாங்­கும் ஆற்­ற­லும் உள்­ளன.

டெக்­ச­ஸைச் சேர்ந்த எக்­சி­யோம் ஸ்பேஸ் எனும் நிறு­வ­னம் ஆடையை வடி­வ­மைப்­ப­தற்­கான குத்­த­கை­யைச் சென்ற ஆண்டு பெற்­றது. குத்­த­கை­யின் மதிப்பு $228 மில்­லி­யன் டாலர் (S$307.27 மி.) ஆகும்.