சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கார்த்திக் குமார்

ஆணா­திக்­கம், பாலின பாகு­பா­டு­களை உடைத்­தெ­றி­யும் நோக்­கு­டன் நடி­க­ரும் நகைச்­சு­வைக் கலை­ஞ­ரு­மான கார்த்­திக் குமார் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தனது நகைச்­சுவை நிகழ்ச்­சியை மேடை­யேற்­றி­னார். இந்­நி­கழ்ச்சி அலை­யன்ஸ் ஃபிரான்­சைஸ் அரங்­கத்­தில் இரவு ஏழு மணி­ய­ள­வில் நடை­பெற்­றது.

‘ஆண்ஸ்­ப்­லெய்­னிங்’ என்ற இந்­நி­கழ்ச்­சி­யைக் கண்டு ரசிக்க கிட்­டத்­தட்ட 200 பேர் திரண்­ட­னர். தனது வாழ்க்­கை­யில் சோகம், வலி உண்­டாக்­கிய நிகழ்­வு­களை நகைச்­சு­வை­யு­டன் பகிர்ந்­த­தோடு, ஓர் ஆணாக தனது அடை­யா­ளத்­தை­யும் சலு­கை­க­ளை­யும் பற்றி சிந்­திக்­கத் தூண்­டிய சம்­ப­வங்­க­ளை­யும் அவர் நினைவு கூர்ந்­தார்.

ஆணா­திக்­கம், உற­வு­களில் இருக்­கக்­கூ­டிய சிக்­கல்­கள் போன்ற மோச­மான பிரச்­சி­னை­களைச் சாமர்த்­தி­ய­மாக நகைச்­சுவை கலந்து பேசி மக்­க­ளின் கைதட்­ட­லைப் பெற்­றார் கார்த்­திக் குமார். நிகழ்ச்­சி­யின் 90 நிமி­டங்­களில் பார்­வை­யா­ளர்­க­ளின் கவ­னத்தை திசை­தி­ருப்­பா­மல் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந் நிகழ்ச்சி மக்­களை சிந்­திக்­க­வும் வைத்­தது.

நம் சமு­தா­யத்­தில் இருக்­கும் பாலி­னம் தொடர்­பான பொறுப்­பு­களை விமர்­சித்து தனது வாழ்க்கை அனு­ப­வங்­க­ளு­டன் ஒப்­பிட்­டுப் பார்த்­தார் கார்த்­திக் குமார். இன்­றைய கால­கட்­டத்­தில் ஆண், பெண் அடிப்­ப­டை­யில் ஒரு­வ­ரைப் புறக்­க­ணிப்­பது தவறு என்ற முக்­கிய கருத்­தைத் துல்­லி­ய­மாக நகைச்­சு­வை­யு­டன் முன்­வைத்­தார். ஆணா­கப் பிறந்­தால் கிடைக்­கும் சலு­கை­களை நக்­க­லு­டன் வின­வி­னார். அரங்­கத்­தில் உள்ள பார்­வை­யா­ளர்­க­ளின் வாழ்க்கை அனு­ப­வங்­க­ளைக் கேட்­ட­றிந்து அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.

தனக்­குக் கேடு விளை­வித்த ஒரு காதல் அனு­ப­வத்­தை­யும் அதன் கார­ண­மா­கத் தனக்கு ஏற்­பட்ட மன­வு­ளைச்­ச­லை­யும் வெளிப்­ப­டை­யாக பகிர்ந்­து­கொண்­டார் கார்த்­திக் குமார். மன­தைப் புண்­ப­டுத்­திய அந்த உற­வி­லி­ருந்து கற்­றுக்­கொண்ட பாடங்­கள் ஓர் ஆணா­கத் தனது அடை­யா­ளத்­தைச் செதுக்க உத­வி­யதை கேலி­யா­கக் கூறி­னார்.

ஆணா­திக்­கம் ஓர் ஆணுக்கு சக்­தி­யை­யும் பத­வி­யை­யும் கொடுக்­கும் என்று பல­ரி­டையே இருக்­கக்­கூ­டிய தவ­றான எண்­ணத்­தைப் புறக்­க­ணித்து, அது நம்மை எவ்­வாறு பாதிக்­கிறது என்ற கேள்­வி­யைத் தொடர்ந்து கேட்­க­வேண்­டும் என்ற அறி­வு­ரையை மக்­க­ளுக்­குப் புரி­யும் வண்­ணம் நகைச்­சு­வை­யு­டன் எடுத்­துச் சொன்­னார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்­தி­ருந்த அதில் இடம்­பெற்ற நகைச்­சு­வை­யான சம்­ப­வங்­க­ளைச் சித்­தி­ரிக்­கும் சிறு ‘டூடல்ஸ்’ ஓவி­யங்­களை நினை­வுச் சின்­ன­மாக கார்த்­திக் குமார் பார்­வை­யா­ளர்­களுக்கு வழங்­கி­னார். மக­ளிர் தினத்­தை­யொட்­டிப் பெண்­களுக்கு ஒட்­டு­வில்லை அட்­டை­யை­யும் வழங்­கி­னார்.

“கார்த்­திக் குமார் கூறிய கதை­கள் சிரிப்பு ஊட்­டு­வ­தோடு, ஆண்­க­ளாக எங்­களை சிந்­திக்க வைத்­தது. தங்­க­ளின் உணர்­வு­க­ளைப் பற்­றி­யும் பேச ஆண்­களை ஊக்­கு­வித்­தது இந்­நி­கழ்ச்சி,” என்­றார் நிகழ்ச்­சியை தனது குடும்­பத்­து­டன் பார்க்க வந்த 25 வய­து ர. தக்ஷ்ணா.

குடும்­பத்­தில் இருக்­கும் பெண்­க­ளு­டன் இந்­நி­கழ்ச்­சி­யைப் பார்த்­தது மாறு­பட்ட அனு­ப­வ­மாக இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார். ஓர் ஆணாக தனக்கு இருப்­ப­தா­கச் சொல்­லப்­படும் சலு­கை­களை கேள்­வி­கேட்­காத தக்ஷ்ணா, நிகழ்ச்சி முடிந்­த­வு­டன் அது குறித்து குடும்­பத்­தா­ரு­டன் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கக் கூறி­னார்.

“இந்­நி­கழ்ச்­சிக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளதை நினைத்து மகிழ்­கி­றோம். இது போன்ற கருத்­து­க­ளைக் கொண்ட நிகழ்ச்­சி­கள் மக்­க­ளைச் சென்­ற­டைய எங்­கள் நிறு­வ­னம் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கிறது,” என்­றார் ‘பப்­பல் ஓரா ப்ரொ­ட­க் ஷன்’ நிறு­வ­னத்­தின் இயக்­கு­நரான ஜானகி சாமிக்­கண்ணு.

ஆண்ஸ்­பெ­லெய்­னிங்’ நிகழ்ச்­சியை மேலும் பல நாடு­களில் மேடை­யேற்ற தயா­ரா­கி­றார் கார்த்­திக் குமார்.

ரச்சனா வேலாயுதம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!