சிங்கப்பூர் ரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கச் செயலவை

1 mins read
43e5e542-f4f5-4795-8691-7441fa436447
-

சிங்­கப்­பூர் ரத்­தி­னக்­கல் வர்த்­த­கர்­கள் சங்­கத்­தின் (ஜீடாஸ்) ஆண்­டுப் பொதுக் கூட்­ட­மும் விருந்து நிகழ்ச்­சி­யும் இம்­மா­தம் 10ஆம் தேதி­யன்று சந்­தர் சாலை­யில் உள்ள மிஸ்­டர் பிரி­யாணி உண­வ­கத்­தில் நடை­பெற்­றது. சங்­கத்­தின் தலை­வர் திரு அ. முகம்­மது பிலா­லின் தலை­மை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் கொவிட்-19 காலத்­தில் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு அர­சாங்­கத்­தின் உதவி கிடைக்­கப் பெற்­ற­தற்­கும் அதற்கு உத­வி­யாகச் செயல்­பட்ட சிங்­கப்­பூர் மலாய் வர்த்­தக தொழிற்­சபை, சிங்­கப்­பூர் இந்­தி­யர் வர்த்­தக தொழிற்­சபை, நிதி அமைச்சு ஆகி­ய­வற்­றுக்­கும் நன்றி தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும், மாறி­வ­ரும் சூழ­லில் ரத்­தி­னக்­கல் வர்த்­த­கர்­களை இணை­யம்­வ­ழி­யா­க­வும் இன்ஸ்­ட­கி­ராம் போன்ற சமூக ஊட­கங்­கள் வாயி­லா­க­வும் வர்த்­த­கம் செய்ய ஊக்­கு­விப்­ப­தோடு அத்­த­கைய முயற்­சி­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கும் எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பை அணுக ஜீடாஸ் கைகொ­டுக்­கும் என்­றும் கூறப்­பட்­டது.

முன்­ன­தாக சங்­கத்­தின் ஆலோ­ச­கர் திரு பஷீர் அக­மது தேர்­தல் அதி­கா­ரி­யாக இருந்து 2023-2025 காலகட்டத்­திற்­கான செய­ல­வைத் தேர்­தல் நடத்­தப்­பட்­டது. சில புதிய செய­ல­வை­யி­ன­ரோடு முகம்­மது பிலால் மீண்­டும் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

செய்தி, படம்: ஜீடாஸ்