பஞ்சதந்திரம்: பண்டைய இந்தியாவின் மறக்க முடியாத புராணக் கதைகள்

பஞ்சதந்திரம்: பண்டைய இந்தியாவின் மறக்க முடியாத புராணக் கதைகள்

1 mins read
7b055c7d-9c26-423c-acf5-67789f38ec0c
-

கருணாநிதி துர்கா

'பிரண்ட்ஸ் ஆஃப் தி மியூ­சி­யத்தின்' ஏற்­பாட்­டி­லும் ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தின் ஆத­ர­வு­ட­னும் 'ஃபிரைடே வித் பிரண்ட்ஸ்!' என்ற தொடர் நிகழ்ச்­சி­ பொது­மக்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவற்­றில் அடங்­கு­கிறது 'பஞ்­ச­தந்­தி­ரம்: பண்­டைய இந்­தி­யா­வின் மறக்­க­மு­டி­யாத புரா­ணக்­க­தை­கள்' எனும் சொற்­பொ­ழிவு.

இம்­மா­தம் 24ஆம் தேதி­யன்று நீ ஆன் கொங்சி அரங்­கில் இரவு ஏழு­முதல் எட்டு மணி வரை இந்­நி­கழ்ச்சி நடை­பெ­ற­வுள்ளது. இதில் பொது­மக்­கள் இல­வ­ச­மா­கப் பங்­கு­பெ­ற­லாம். சொற்­பொ­ழி­வின் பேச்­சா­ளர் அபா தயாள் கவுல்.

முதன்­மு­த­லில் சமஸ்­கி­ரு­தத்­தில் எழு­தப்­பட்ட பஞ்­ச­தந்­தி­ரக் கதை­கள் பொழு­து­போக்­குக் கதை­கள்­போ­லத் தோன்­ற­லாம். ஆனால், அவை அர­சி­யல் ­சூழ்ச்சி பற்­றிய மூலக் கொள்­கை­க­ளைத் தெளி­வு­ப­டுத்­தும் கதை­கள் ஆகும்.

அவற்­றில் அர­ச­நீ­தி­யின் மையக்­கருத்­து­கள் விலங்­குக் கதை­க­ளின்­மூ­லம் சொல்­லப்­பட்­டுள்­ளன. சிறு­வர்­கள் மட்­டு­மின்­றிப் பெரி­ய­வர்­க­ளின் ஆர்­வத்­தை­யும் தூண்­டும் வகை­யில் இந்­நி­கழ்ச்சி அமை­யும்.

இம்­மா­தம் மேலும் பல நிகழ்ச்­சி­கள் ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. மேல்­வி­வ­ரங்­களுக்கு அதன் இணையப்­பக்­கத்தை நாடலாம்.