சருமத்தை ஜொலிக்க வைக்கும் செம்பருத்தி

சருமத்தை ஜொலிக்க வைக்கும் செம்பருத்தி

1 mins read

செம்பருத்திப் பூவை நன்றாக வெயிலில் காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியுடன் தேன் மற்றும் கற்றாழையைச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இந்தக் கலவையை முகத்தில் தடவு வதற்கு முன்பு முகத்தை 5 முதல் 7 நிமிடங்கள் வரை நீராவியில் காட்ட வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் அழுக்கு வெளியேறும்.

இதனைத் தொடர்ந்து, முகத்தை நன்றாக துடைத்துவிட்டு கலந்துவைத்துள்ள பசையைத் தடவ வேண்டும். கிட்டத் தட்ட 20 நிமிடங்கள் வரை இதை வைத்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும், சோப் பயன்படுத்தக் கூடாது. வாரத்திற்கு ஒருநாள் செய்தால் முகம் ஜொலிக்கும்.