சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கா. சண்முகம் கடந்த 2022 நவம்பர் மாதம் நடந்த சொங் பாங் உடலுறுதி மையத்தில் 125 கிலோ எடையைத் தூக்கி நண்பர்களையும் குடும்பத்தினரையும் வியக்கவைத்தார்.
இப்போது 64 கிலோ எடையுடன் 1.75 மீட்டர் உயரமுள்ள அமைச்சர் கா.சண்முகம் கூறுகையில், "எடை தூக்கும் பயிற்சியால் எனது தசைகளின் வலிமையும் நெகிழ்வுத் தன்மையும் மேம்பட்டுள்ளது," என்றார்.
இளம் நீச்சல் வீரரும் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருபவருமான என் நண்பர் ஒருவர், "என்னால் ஒருநாள் 150 கிலோ எடையையும் அதற்கு மேலும் தூக்கமுடியும்," என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அதனால், அவரும் என்னுடன் சேர்ந்து பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று இம்மாதம் 64 வயதாகும் திரு சண்முகம் கூறியுள்ளார்.
கடந்த 2021ல் அவர் 105 கிலோ எடையைத் தூக்கும் காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட, அது வேகமாகப் பரவியது.
திரு சண்முகத்தின் பயிற்சியாளராகக் கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் 'தி ஃபிட்னஸ் புரோட்டோகால்' உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளர் திரு டேவிட் டெவிட்டோ இருந்து வருகிறார்.
பரபரப்பான வேலைச் சூழலுக்கு மத்தியிலும், வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை உடற்பயிற்சி செய்வதை அமைச்சர் உறுதி செய்துகொள்கிறார்.
இவற்றில் இரண்டு அமர்வுகள் திரு டெவிட்டோவுடனான வலிமை பயிற்சிகளும் அடங்கும் என்று திரு சண்முகம் தெரிவித்துள்ளார்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊட கத்தின் நேர்்காணலுக்குப் பின்னர், திரு சண்முகம் தனது பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் ஆறு வெவ்வேறு பயிற்சி முறைகளையும் செய்து காண்பித்தார்.
"நம்மில் பலர் வாழ்நாளின் பெரும்பகுதியை திரைக்கு முன்பாகவும் தொலைபேசியிலும் செலவிடுகிறோம். இதனால், நமது தோள்கள் உறைந்து போயிருக்கும். இடுப்பு, கால்கள் வளைந்து கொடுக்க மறுக்கும். தசைகள் மிகவும் இறுகி இருக்கும். நம் உடலை மீண்டும் சரியான செயல் முறைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும்," என்கிறார் திரு சண்முகம்.
"சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் என் தந்தை. அவர் காலையிலேயே எழுந்து என்னை உடற்பயிற்சி செய்யும்படி கூறுவார்," என்றார்.
எனது உடற்பயிற்சி செய்யும் விதம் இப்போது முழுமையான ஒழுங்குமுறைக்கு மாறியுள்ளது.
கூடுதலாக, 10 கிலோ எடையுள்ள பயிற்சி அங்கிகளுடன் ஏறக்குறைய 10 முதல் 12 கி.மீ. தூரம் வரை நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உடற்பயிற்சிகள் செய்யாவிடில் மந்தமாக இருப்பதுபோல் உணர்வதாகவும் உடற்பயிற்சியால் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் கூறுகிறார்.
வலிமை பயிற்சி குறிப்பாக, தன்னை வலிமையாக்கியதாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். உணவில் சர்க்கரை சேர்த்துக்கொள்வதில் நீண்டகாலமாக கவனமாக இருப்ப தாகவும் திரு சண்முகம் கூறுகிறார்.
உடற்பயிற்சி செய்யத் தொடங்க விரும்பும் முதியவர்கள் "நடைப் பயிற்சி போன்ற எளிய பயிற்சிகளுடன் தொடங்குங்கள். ஃப்ரீஹேண்ட் பயிற்சிகளைச் செய்யுங்கள். மென்மையாகச் செயல்பட்டு, ரத்த ஓட்டத்தைப் பெற்று, மெதுமெதுவாக உங்கள் உடற்தகுதியை மேம்படுத்திக்கொள்ளுங்கள்," என்றும் அறிவுறுத்துகிறார் இவர்.
"உடற்பயிற்சியின் மூலம் நீங்கள் மெலிந்த தசை, நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கவும் வலியின்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடக்கவும் ஓடவும் முடியும்," என் கிறார் அமைச்சர் கா. சண்முகம்.

