தமிழகத்தின் தனித்தமிழ் இயக்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

தமிழகத்தின் தனித்தமிழ் இயக்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

1 mins read
Google News Preferred Icon

தென்கிழக்காசியச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக வரும் 23ஆம் தேதி வியாழக்கிழமை சிங்கப்பூர் வரும் தமிழகத் தனித்தமிழ் இயக்க உறுப் பினர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்குச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான மறைமலை அடிகளின் பேரன் திரு. மறை.தி. தாயுமானவன், தென்மொழி இதழின் தற்போதைய ஆசிரியர் முனைவர் மா. பூங்குன்றன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 5வது தளத்தில் மாலை 6.30 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தேசியக் கல்விக் கழகத் தமிழ்ப் பிரிவின் தலைவர் இணைப் பேராசிரியை முனைவர் சீதாலட்சுமி, மறைமலை அடிகள் பற்றிச் சிறப்புரை ஆற்றுவார்.