மீண்டும் வேண்டும் எனத் தூண்டும்

மீண்டும் வேண்டும் எனத் தூண்டும்

1 mins read

அதிக சர்க்­க­ரை­யும் கொழுப்­புச் சத்­தும் உள்ள உண­வு­களை அடிக்­கடி உண்­ணும்­போது, அவை மூளைச் செயல்­பா­டு­களை மாற்றி, இனிப்­பு­வ­கை­கள் மீண்­டும் மீண்­டும் வேண்­டும் என்று மூளைக்­குக் கற்­றுத்­தந்து தூண்­டி­வி­டும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது.

அந்­தப் பழக்­கத்­தைத் திருத்­திக்­கொள்­வது கடி­ன­மாக இருக்­கும் என்று யேல் பல்­க­லைக் ­க­ழ­க­மும் ஜெர்­ம­னி­யில் உள்ள மேக்ஸ் பிளாங்க் வளர்­சிதை மாற்ற (Metabolism) ஆய்­வுக்­ க­ழ­க­மும் நடத்­திய ஆய்­வில் தெரிய வந்­தது.

உடல்­ந­லத்­துக்­குக் கேடு விளை­விக்­கும் சர்க்­க­ரை­யும் கொழுப்­புச் சத்­தும் அதி­க­முள்ள உண­வு­களை இயற்­கை­யா­கவே ஒரு­வ­ருக்­குப் பிடிக்­கி­றதா அல்­லது அது கற்­றுக்­கொண்ட ஒரு பழக்­கமா என்­பது இது­வரை தெரி­யா­மல் இருந்­தது.

ஆனால், தின­மும் அதிக சர்க்­க­ரை­யும் கொழுப்­பும் உள்ள உண­வு­வ­கை­க­ளைச் சாப்­பிட்டு வரும்­போது ஊக்­க­மும் வெகு­மதி­யும் பெறு­வ­தற்­குப் பொறுப்­பான மூளை­யின் பகுதி செயல்­படும் விதம் மாறு­வ­தாக ஆய்வு தெரி­வித்­தது.

இவ்­வகை உண­வு­க­ளால் தூண்­டப்­படும் மூளை, அவற்­றையே விரும்­பு­கிறது. அதிக சர்க்­கரை உள்ள உண­வு­க­ளைத் தொடர்ந்து உண்­டு­விட்டு, உடல்­ந­ல­னுக்கு ஏது­வான உணவு வகை­க­ளைச் சாப்­பி­டும்­போது, மூளை அதை எளி­தில் ஏற்­காது என்­றும் கூறப்­பட்­டது.

ஆக, இன்­றைய பல உண­வுப் பழக்­கங்­கள் மூளை பழ­கிக் கொண்­ட­வை­தான் என்­பது ஆய்வு கூறும் செய்­தி­யா­கும்.