மலையாள சமூகத்தினரின் பண்பாடு பற்றிய பார்வை

மலையாள சமூகத்தினரின் பண்பாடு பற்றிய பார்வை

2 mins read

ரச்சனா வேலாயுதம்

மலை­யா­ளப் பண்­பாட்­டைப் பிர­தி­ப­லிக்­கும் நில­வி­ளக்கு, அணி­க­லன்­கள், ஓணம் பண்­டி­கை­யின் 'சத்யா' விருந்து படைக்­கும் முறை, பூக்­கோ­ல­மான அத்­தப்­பூவி­டல் ஆகிய அம்­சங்­களை எடுத்துரைத்தது இம்மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை நடந்த 'சிங்­கப்­பூர் மலை­யா­ளி­கள்' நிகழ்ச்சி.

சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மைய­மும் தேசிய நூலக வாரி­ய­மும் இணைந்து ஏற்­பாடு செய்த நிகழ்­வில் கிட்­ட­தட்ட 100 பேர் கலந்­துக்­கொண்­ட­னர். தேசிய நூல­கத்­தில் நடை­பெற்ற நிகழ்வை சிங்­கப்­பூர் மலை­யாளி­கள் சங்­கம் வழி­ந­டத்­தி­யது.

ரேஷ்மி பிள்ளையின் பயிற்­று­விப்­பில் பல சமயத்தினரின் நடனங்கள் மேடை­யேற்­றப்­பட்­டன.

"மக்­கள் தொகை­யில் சுமார் 28,000 பேர்­கொண்ட சிறு­பான்மையினராக மலை­யாள சமூ­கத்­தி­னர் இருந்­தா­லும், சிங்­கப்­பூ­ரின் பல முக்கிய பொறுப்பு­களி­லும் பத­வி­க­ளி­லும் மிளிர்ந்து ­வ­ரு­கி­றார்­கள்," என்­றார் நிகழ்ச்சியில் உரையாற்றிய முனைவர் அனிதா தேவி பிள்ளை.

மலை­யா­ள சமூ­கத்­தி­னர் பெயர்­வைக்­கும் முறை­, பண்­பாட்டுக் கூறு­கள், வாழ்­வி­யல் முறை­கள் ஆகி­ய­வற்றை விளக்­கிய முனை­வர் அனிதா, தம்மைப் போன்றவர்கள் சிங்கப்பூரில் மலை­யா­ளம், ஆங்­கி­லம், தமிழ் ஆகிய மும்­மொழி களில் கைதேர்ந்து அவற்றைப் பயன்படுத்தும் சூழல் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

அடுத்து நடந்த குழுக் கலந்­து­ரை­யா­டலில் கத­க­ளி நடனத்தின் பாவனை­கள், கை அசை­வு­கள், ஆகி­யவை பற்றி விளக்கி­னார் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தக­வல் தொழில்­நுட்ப விரி­வு­ரை­யா­ள­ரும் கத­களி கலை­ஞ­ரு­மான முனை­வர் கணேஷ் ஐயர்.

"குறு­கிய காலக்­கட்­டத்­தில் ஒரு­வர் கத­களி நடனத்தைக் கற்­றுக்­கொள்­ள­லாம். அன்­றாட வாழ்க்கை உணர்­வு­கள், நட­வ­டிக்­கை­கள் போன்­ற­வற்றைப் பிர­தி­ப­லிக்­கும் இந்த நட­னம் எளி­தா­கப் புரிந்துகொள்­ளும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார் அவர்.

மலாய், சீன மொழிப் பாடல் ­க­ளைக் கத­களிக்கு ஏற்ற இசையில் பாடி பார்­வை­யா­ளர்­க­ளைக் கவர்ந்­தார் முனை­வர் கணே‌ஷ். மேலும், பாரம்­ப­ரிய உடை­ய­ணிந்த சில பங்­கேற்­பாளர்­கள் அவற்றின் சிறப்­பு­களை விளக்­கி­னர்.

"இவ்­வ­கைப் பண்­பாட்­டுப் பரி­மாற்ற நிகழ்ச்­சி­கள்மூலம் பிற பண்­பா­டு­க­ளைப் பற்­றிப் புரிந்­து­கொள்­ள­வும் பல இனத்த வரிடையே நல்­லி­ணக்­கம் பேண­வும் முடி­யும்," என்­றார் நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ரான சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் துணைத் தலை­வர் இள­வ­ழ­கன் முரு­கன்.