நாகப்பட்டினம் சங்கத்தின் குடும்ப ஒன்றுகூடல்

நாகப்பட்டினம் சங்கத்தின் குடும்ப ஒன்றுகூடல்

2 mins read
580808a2-127b-4771-9365-7566b39e1939
-
Google News Preferred Icon

நாகப்பட்டினம் சங்கத்தின் குடும்ப தின நிகழ்ச்சி சாங்கி சிவில் சர்விஸ் கிளப்பில் இம் மாதம் 12ஆம் தேதி காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

சிங்கப்பூர் வாழ் நாகப்பட்டினம் குடும்பத்தார் சுமார் 250 பேர் கலந்துகொண்ட குடும்ப தின நிகழ்வுக்கு உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் ஃபைஷல் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம் சங்கத்தின் தலைவர் திரு ஷேக் மைதீன் ஜஹபர் சாதிக் வரவேற்புரை நிகழ்த்திய பின் சிறப்பு விருந் தினருக்கு பொன்னாடை போர்த்தி, சந்தனமாலை அணி வித்து, நாகப்பட்டினம் பற்றி முன்னாள் தூதர் திரு கே. கேசவபாணி எழுதிய நூலை நினைவுப் பரிசாக வழங்கினார்.

சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆர். அன்பரசு, முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு முஹம்மது இர்ஷாத், சமாதான நீதிபதி திரு நிஜாமுத்தீன், இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் திரு முகம் மது பிலால், சமூகத் தலைவர்கள், ஆதரவாளர் களான டிஎம்ஒய் நகைக்கடை மேலாளர் திரு சலீம், டிஃபன் பவன் உணவக அதிபர் திரு சுல்தான், பரக்கத் உணவக அதிபர் திரு மு. அ. மசூது, கிளிஃபர்டு ஜெம்ஸ் நாணயமாற்று நிறுவன அதிபர் ஹாஜி முஹம்மது ரபீக், ராயல் கிங்ஸ் டிரேடிங் அதிபர் சிராஜுத்தீன் உட்பட சிலர் அவர்களின் தொடர் ஆதரவுக்காக சிறப்பிக்கப்பட்டது.

குடும்ப தினம் என்ற கொண்­டாட்­டத்தை முன்­னிட்டு சிறு­வர்­கள், பெரி­ய­வர்­கள், மக­ளிர் என மூன்று பிரி­வு­க­ளாக விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடை­பெற்­றன. பெரி­ய­வர்­க­ளுக்­கான வடம் இழுக்­கும் போட்­டியை சிறப்பு விருந்­தி­னர் டாக்­டர் ஃபைஷல் துவக்கி வைத்­தார்.

சிறுவர்களுக்கு சாக்கு ஓட்டம், பெண்களுக்கு இசை நாற்காலி என விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக டாக்டர் ஃபைஷல் இப்ராஹிம், தமது உரையில் நாகப்பட்டினம் சங்கம் துவங்கப்பட்ட ஒரு சில ஆண்டுகளிலேயே பல்வேறு சமூக சேவைகளில் தனித்தும் நட்பு அமைப்புகளோடு இணைந்தும் செயலாற்றி வருவதை வெகுவாகப் பாராட்டினார்.

வாழ்த்துரை வழங்கிய திரு அன்பரசு, 'பங்காற்றும் சமுதாயம்; வெற்றிகரமான சமுதாயம்!' என்ற பதாகை தன்னை கவர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

சிறுவர்கள், இளையர்கள், பெரியோர் என குடும்பமாக கலந்துகொண்டு குதூகலம் அடை வதைக் கண்டு தான் மகிழ்வதாகவும் திரு அன்பரசு தெரிவித்தார்.