தமிழிசையைப் பரப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழிசையைப் பரப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

2 mins read
7305e7e2-7fdb-467e-aa9e-2c1af2bf354c
-

சென்­னை தமி­ழி­சைச் சங்­க­மும் சிங்­கப்­பூர் கலா­மஞ்­சரி எனும் தமிழ் இசைப் பயிற்­று­விக்­கும் நிறு­வ­ன­மும் செய்­து­கொண்ட புரிந்­து­ணர்வு கையொப்­ப­மி­டல் நிகழ்ச்சி இம்­மா­தம் 20ஆம் தேதி சிங்­கப்­பூர் தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தின் 'பாசி­பி­ளிட்டி' அறை­யில் நடை­பெற்­றது.

இவர்­க­ளின் தமி­ழி­சைப் பய­ணம் பற்­றிய விளக்­கப் படக் காணொளி தயா­ரிக்­கப்­பட்டு நல்ல அரிய பல வர­லாற்­றுச் செய்­தி­களை மக்­க­ளி­டம் பகிர்ந்துகொண்­டது.

பேரா­சி­ரி­யர் சுப. திண்­ணப்­பன் தமது தலை­மை­யு­ரை­யில் தமி­ழி­சை­யின் தொன்மை, வளமை, நன்­மை­க­ளைப் பட்­டி­ய­லிட்டு இந்­நி­கழ்வு வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தெ­னப் பாராட்­டிப் பேசி­னார். தமி­ழி­சை­யைப் பாடு­தல் அரு­கி­வ­ரும் இக்­கா­லத்­தில் இத்­த­கைய மீட்­டெ­டுக்­கும் முயற்சி மிகுந்த பாராட்­டுக்­கு­ரி­யது எனக் குறிப்­பிட்­டார்.

சிறப்பு விருந்­தி­ன­ராக பங்கேற்ற இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் தலை­வ­ரும் சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பதி­வா­ள­ரு­மான ஆர் இரா­ஜா­ராம், இந்த விழா­வின் நோக்­கத்­தை­யும் மேலும் இதற்­காக கலா­மஞ்­சரி அமைப்பு தன்­னைத் தயார்ப்ப­டுத்­திக் கொண்டு மேன்­மை­ய­டைந்­த­தை­யும் பற்­றிக் குறிப்­பிட்­டார்.

இந்தப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தின் மூலம் சிங்­கப்­பூ­ரில் தமிழ் இசை­யில் நிகர்­நி­லைப் படிப்­பு­க­ளுக்கு, கலா­மஞ்­சரி அமைப்­பி­ன­ரால் சென்­னைத் தமி­ழி­சைச் சங்­கத்­தின் மூலம் தேர்­வு­கள் நடத்தி மாண­வர்­ களுக்­குச் சான்­றி­தழ் வழங்­கிட இய­லும் என்­பது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது என்றார் அவர்.

இசை­ய­றி­ஞர் திரு அரி­ம­ளம் பத்­ம­நா­பன் தமது வாழ்த்­து­ரை­யில் இதன் மூலம் வருங்­கா­லத்­தில் முனை­வர் பட்ட ஆய்வு மாண­வர்­கள் உரு­வா­கும் சூழ­லைத் தாம் மகிழ்­வு­டன் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­னார்.

திரு­மதி சௌந்­த­ர­நா­யகி வயி­ர­வன் தமது உரை­யில் கலா­மஞ்­சரி அமைப்பு தமி­ழிசை மூலம் செய்­து­வ­ரும் பல நல்ல சமூ­கப் பணி­க­ளைக் குறிப்­பிட்­டுப் பேசி­னார்.

இந்த ஒப்­பந்­தத்­திற்கு சாட்சி கையெ­ழுத்­திட்ட டாக்­டர் வெள்­ளை­யப்­பன், டாக்­டர் கரு­ணா­நிதி ஆகி­யோர் சிறப்பிக்கப்பட்டனர்.

இசை­யா­சி­ரி­யர் திரு­மதி உமா பிர­காஷ் தமது மாண­வர்­க­ளு­டன் நேர்த்­தி­யா­கச் சில தமி­ழி­சைப் பாடல்­க­ளைப் பாடி அனை­வ­ரையும் மகிழ்­வித்­தார்.

சென்­னைத் தமி­ழி­சைச் சங்­கத்­தின் முதல்­வர் டாக்­டர் மீனாக்ஷி தமது நன்­றி­யு­ரை­யில் தமி­ழி­சை­யின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் பய­னை­யும் குறிப்­பிட்டு இந்­நி­கழ்­விற்கு உறு­து­ணை­யாக இருந்த அனை­வ­ருக்­கும் நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

ஒலி­யொ­ளிக் காட்­சி­களை பிரேம்­கு­மார் மற்­றும் ஜெயக்­கு­மார் இணைந்து கையாண்­ட­னர். விழா நிகழ்ச்­சி­யினை திரு­மதி அகிலா முத்து அழ­கா­ன தமிழில் மிக நேர்த்­தி­யாக வழங்­கி­னார்.

(செய்தி: முனை­வர் பா. ராம­நா­தன்)