மாற்றத்தை வரவேற்போம்; அன்பைக் கொண்டாடுவோம்

மாற்றத்தை வரவேற்போம்; அன்பைக் கொண்டாடுவோம்

2 mins read
41ee64db-d005-41cc-8623-186d779d8a7c
-

மாதங்கி இளங்­கோ­வன்

ஒரே பாலி­னத்­த­வ­ரது வாழ்க்­கை­முறை முன்­ன­தா­கக் குற்­றம் என சிங்­கப்­பூர் சட்­டம் சுட்­டி­யதை அடுத்து கடந்த நவம்­ப­ரில் குற்­ற­வி­யல் தண்­ட­னைச் சட்­டம் 377A பிரிவு நீக்­கப்­பட்­டது. தம் அன்பை வெளிப்­ப­டை­யா­கக் கொண்­டாடு­வ­தற்­குக் காலம் கனிந்­து­விட்­டதை எண்ணி மகிழ்ந்­தார், உள்­ளூர்க் கலை­ஞர் நரேன், 42.

தம் காதல் பய­ணத்­தின் பத்­தாண்டு நிறை­வைக் கொண்­டாடு­வ­தற்­காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நரேன் தம்­மு­டைய காத­லர் பாலா­வு­டன் துருக்­கி­யின் கப்­ப­டோ­சி­யா­வுக்­குச் சென்று எழில்­மிக்­கப் பின்­ன­ணி­யில் புகைப்­ப­டங்­கள் எடுத்­தி­ருந்­தார்.

ஆனால் இரு­வ­ரும் நெருக்­க­மாக இருக்­கும் புகைப்­ப­டங்­களைச் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்­றம் செய்­யத் தயங்­கிய நரேன், 377A சட்­டப்­பி­ரிவு நீக்­கப்­பட்­ட­போது பய­மின்றி அப்­ப­டங்­களைப் பதி­வேற்­றம் செய்­தார்.

"என் நாடே என்­னு­டைய காதலை ஏற்­றுக்­கொள்­ளும்­போது சமு­தா­யம் என்ன நினைக்­கிறது என்று நான் ஏன் பயப்­பட வேண்­டும்?" என்­றார் நரேன்.

நடிப்பு, 'மாட­லிங்' எனக் கடந்த 19 ஆண்­டு­க­ளாக கலைத்­து­றை­யில் உள்ள நரேன், தமது 32வது வய­தில் பாலா­வுக்கு அறி­மு­க­மானார். இரு­வ­ரும் பின்­னர் துணைத் தேடும் செயலி ஒன்­றின் மூலம் மீண்­டும் இணைந்­தனர். ஆர்ச்­சர்ட் சாலை­யில் சந்­தித்து மணிக்­க­ணக்­காய்ப் பேசிய நாளை நினை­வு­கூர்ந்த நரேன், பாலா நல்ல மனி­தர் என அன்றே தாம் உணர்ந்­த­தா­கக் கூறி­னார்.

ஒரு மாதம் பழ­கி­ய­தில் பாலா­வின் குணத்­தைப் புரிந்­து­கொண்டு அவ­ரு­டன் சேர்ந்­திருக்க முடி­வெ­டுத்­தார் நரேன்.

இரு­வ­ரது உற­வை­யும் தொடக்­கத்­தில் நரே­னின் சகோ­தரி ஏற்­றுக்­கொள்­ளத் தயங்­கி­னார். இருப்­பி­னும் நரேன் தமது அடை­யா­ளத்­தைப் பற்­றி­யும் தாம் பாலா­மீது கொண்­டுள்ள அன்­பைப் பற்­றி­யும் சகோ­த­ரிக்­குப் புரி­ய­வைத்­தார். இன்று நரே­னின் குடும்­பத்­தில் ஒரு­வ­ராக பாலா மாறி­விட்­டார்.

நரே­னின் நண்­பர்­கள் பாலா­வைப் பற்றி விசா­ரிக்­கும்­போ­து­கூட தங்­க­ளின் உற­வைத் தவ­றான கண்­ணோட்­டத்­தில் அவர்­கள் பார்ப்­ப­தில்லை என்று நெகிழ்ந்­தார் நரேன்.

நரே­னின் வர்த்­தக முயற்­சி­களில் பக்­க­ப­ல­மாக இருக்­கும் பாலா, எந்­நே­ர­மும் தமக்கு உற்­சா­க­மூட்­டும் ஒரு துணை­யாக விளங்­கு­வ­தாக நரேன் குறிப்­பிட்­டார்.

தற்­போது ஒரே பாலி­னத் தம்­ப­தி­யி­ன­ருக்­குத் திரு­ம­ணம், வீட்­டு­ரிமை போன்­றவை எளி­தில் அமை­யாத போதி­லும் கூடிய விரை­வில் இந்­நிலை மாறும் என்று நரேன் நம்­பு­கி­றார்.