இளையர் பார்வையில் பண்பாடும் வாழ்வியலும்

இளையர் பார்வையில் பண்பாடும் வாழ்வியலும்

2 mins read
4c9e599f-c1f7-48ff-8689-ae9a65b1b446
-

ஆ. விஷ்ணு வர்­தினி

உல­கோடு ஒட்ட ஒழு­கும் வேளை­யில் தமி­ழர் பண்­பாட்டு நடை­முறை­களில் சில, முரண்­பா­டு­களாக அமை­யக்­கூ­டும். இத்­தகைய சிக்­கல்­க­ளுக்கு இடையே, உணர்ச்­சி­பூர்­வ­மாக தமிழ்­மொ­ழி­யை­யும் தமி­ழர் பண்­பாட்­டை­யும் வாழ்­வி­யல் முறை­யில் கொண்­டாட வேண்­டும் என்ற கருத்­தினை வலி­யு­றுத்­தி­னர், வெள்­ளிக்­கி­ழமை அன்று தேசிய நூல­கத்­தில் நடந்­தே­றிய கருத்­த­ரங்­கில் பேசிய ஆறு இளை­யர்­கள்.

தேசிய நூலக வாரி­ய­மும் தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கமும் இணைந்து வழங்­கிய இக்­க­ருத்­த­ரங்கு, கலா­சா­ரத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தில் இளை­யர் எதிர்­நோக்­கும் சவால்­களை ஆராய்ந்­தது. அதி­ந­வீன நக­ர­மா­க­வும் பல்­லின சமு­தா­ய­மா­க­வும் விளங்­கும் சிங்­கப்­பூ­ரில் உரு­வா­கி­வ­ரும் தனித்­து­வ­மான சவால்­கள் முன்­வைக்­கப்­பட்­டன.

மாண­வப் பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான தர்­ஷன் மூர்த்தி, நமது பல்­லின சமு­தாய அடை­யா­ளம் ஒவ்­வோர் இனத்­தா­ரின் பண்­பாட்டு புரி­த­லை­யும் ஆழ­மாக்­கு­கிறது எனத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர்­வாழ் தமி­ழர்­கள் பர­வ­லா­கக் கொண்­டா­டும் தைப்­பூ­சத் திரு­விழா, தீபா­வளி போன்ற பண்­டிகை­கள் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் அறிந்­தவை. அவை குறித்த உரை­யா­டல்­களும் வழக்­க­மா­னவை.

இந்­நி­லை­யில், இள­மை­யி­லி­ருந்தே தமி­ழர்­கள் விழிப்­பு­ணர்­வூட்­டப்­பட்டு வளர்­கின்­ற­னர் என்­பதை அவர் முன்­வைத்­தார்.

அதே சம­யம், நவீன காலத்­தில் நமது வச­திக்கு ஏற்ப பண்­பாட்­டினை மாற்றி அமைத்­துக் கொண்­டு வரும் போக்கை இளை­யர்­கள் குறிப்­பிட்­ட­னர். வீவக வீட்­டில் வசிக்­கும் நக­ர­வாசி­க­ளுக்கு உண்­மை­யான விருந்­தோம்­பல் என்­றால் என்ன என்று தெரி­யுமா எனக் கேள்வி எழுப்­பி­னார் மாணவி ஸ்ம்­ருதா சுரேஷ்.

கருத்­த­ரங்கை வழி­ந­டத்­திய ராஃபிள்ஸ் பெண்­கள் பள்­ளி­யின் தமி­ழா­சி­ரி­யர் திரு கும்­ப­லிங்­கம் உத்­த­மன், முன்­னர் இயல்பு வாழ்க்­கை­யில் பண்­பாட்­டுக்கு உர­மிட்­டவை அனைத்­தும் அருகருகே இருந்­த­தைச் சுட்­டி­னார். வாழை இலை­களை உணவு வேளை­க­ளுக்கு வெட்­டிக் கொள்­ள­லாம், தேடிச் சென்று வாங்க வேண்­டி­ய­தில்லை.

ஆனால், இத்­த­டை­க­ளைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரின் கல்­வித்­திட்­டம் மாண­வர்­க­ளுக்­குக் கைகொ­டுத்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"21ஆம் நூற்­றாண்­டுத் திறன்­கள் எனக் கூறப்­படும் நவீ­ன­கால திறன்­க­ளைக் கல்­வித்­திட்­டம் வலி­யு­றுத்­து­கிறது. சிக்­கல்­க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தும் வேற்­றுக் கலா­சார புரி­த­லும் இவற்­றில் அடங்­கும். ஒவ்­வொரு மாண­வ­ரிடத்­தி­லும் இச்­ச­வால்­க­ளைத் தாண்டி அடை­யா­ளத்தை உறு­திப்­படுத்­திக் கொள்­வ­தற்­கான திறன்­கள் வளர்க்­கப்­ப­டு­கின்­றன," என்­றார் அவர்.

நிகழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட நடி­க­ரும் எழுத்­தா­ள­ரு­மான திரு வேல ராம­மூர்த்தி, சீரிய இத்­த­லைப்­பில் பேச மாண­வர்­கள் மேடை­யேற்­றப்­பட்­ட­தைப் பாராட்­டி­னார்.

தொடர்ந்து இளை­யர்­களை தமிழ்­மொ­ழி­யில் ஈடு­ப­டுத்த, பல முயற்­சி­கள் ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­வ­தாக தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கத்­தின் தலை­வர் திரு அருமை சந்­தி­ரன் கூறி­னார்.