மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்களிலுள்ள கருத்துகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, மே தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை இலக்கிய விழாவின் ஓர் அங்கமாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கக்கூடிய பாட்டுப் போட்டிக்கு மக்கள் கவிஞர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. போட்டி விவரங்கள்:
நாள்: 16 ஏப்ரல் 2023
நேரம்: காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை
இடம்: உமறுப்புலவர் தமிழ்
மொழி நிலையம்
தொடக்கநிலை மாணவர்களுக்கான போட்டிப் பிரிவில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளோடு 7 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். உயர்நிலை மாணவர்களுக்கான பிரிவிலும் பொதுப்பிரிவிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுளோடு 3 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மே ஒன்றாம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர், www.mkm.org.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம். பதிவுக்கான இறுதி நாள் ஏப்ரல் 7ஆம் தேதி.