சவால்களுக்கிடையே வரவேற்பு

சவால்களுக்கிடையே வரவேற்பு

2 mins read

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டுவரும் நாடகத்துறை

தமிழ், மலாய், மாண்­ட­ரின் மொழி­களில் கடந்த ஆண்டு அரங்­கேறிய நாட­கங்­கள் பல, மக்­களுக்­கி­டையே பலத்த வர­வேற்­பைப் பெற்­றன. குடும்­பக் கதை, பழங்­கதை­யின் தழு­வல், சமு­தா­யச் சீர்த்­தி­ருத்­தம் எனப் பல­வி­த­மான நாட­கங்­க­ளைக் காண அரங்­கம் நிறைந்­தி­ருந்­த­தோடு வந்­தி­ருந்­தோ­ரும் பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளாக இருந்­த­னர்.

'அகம் தியேட்­டர் லேப்' நிறு­வனத்­தின் 'விலங்­குப்­பண்ணை' நாட­கத்­தைக் காண மொத்­தம் 800 பேர் கடந்த ஆண்டு திரண்­டனர். 2019ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட இந்­நி­று­வ­னத்­திற்கு, இது பெரும் சாதனை.

வேற்­றின இளை­யர்­கள் குறிப்­பாக நாட­கங்­க­ளைக் காண வருகை தந்து, தங்­க­ளுக்­குப் புரி­யாத மொழி­யாக இருந்­தா­லும் திரை­யில் தோன்­றும் மொழி­பெயர்ப்பை வாசிப்­ப­தில் ஆர்­வம் காட்­டு­வ­தாக நாடக நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இருப்­பி­னும் மக்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள இந்த ஆர்­வம், பல காலத்­துக்­குப் பிறகு கிடைத்த வெற்­றியே. கடந்த ஆண்­டு­களில் தாய்­மொ­ழி­யில் நாட­கங்­களை மேடை­யேற்­றும் நிறு­வ­னங்­கள், சமூக ஊட­கங்­களில் தங்­க­ளது கவ­னத்­தைச் செலுத்தி வரு­கின்­றன.

நாட­கங்­களில் பேசப்­படும் மொழியை மாற்றி அமைத்­த­து­டன் புதுத் தலை­முறை கலை­ஞர்­களும் பார்­வை­யா­ளர்­களும் உரு­வா­வ­தற்கு வித்­திட்­டுள்­ளன, இந்­நா­டக நிறு­வ­னங்­கள்.

'அகம் தியேட்­டர் லேப்' உறுப்­பி­னர்­கள் 35 வய­துக்­குக் குறைந்­த­வர்­கள் என்­றும் பலர் வெவ்­வேறு துறை­களில் அனு­ப­வ­மு­டை­ய­வர்­கள் என்­றும் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இவ்­வாறு வெவ்­வேறு துறை­களைச் சேர்ந்த நிபு­ணர்­கள் தங்­கள் திறன்­க­ளைக் கொண்டு நாடக உரு­வாக்­கத்­தின் வெவ்­வேறு அம்­சங்­க­ளுக்கு உத­வ­லாம். இத­னால் மின்­னி­லக்க உல­கைப் பெரி­தும் விரும்­பும் புதிய தலை­மு­றை­யி­னரை ஈர்க்­கும் வண்­ணம் தமிழ் நாட­கத் துறையை மேம்­படுத்­த­லாம் என்­றார் அந்­தப் பேச்­சா­ளர்.

இதற்­கி­டையே, நாட­கம் முழுக்க முழுக்க தாய்­மொ­ழி­யில் இருக்க வேண்­டும் என்­றும் வேறு மொழிச் சொற்­கள் கலந்­தி­ருக்க வேண்­டாம் என்­றும் பங்­கா­ளி­கள் சிலர் கூறி­யி­ருப்­ப­தாக 'சிங்­கப்­பூர் இந்­திய தியேட்­டர் & பிலிம் எக்ஸ்ப்­ளோ­ரஸ்' அமைப்­பின் இயக்­கு­நர் திரு சலீம் ஹாடி குறிப்­பிட்­டார். இருப்­பி­னும், அத்­தகைய நாட­கங்­க­ளுக்கு வர­வேற்பு அதி­கம் இருக்­காது என்­றும் தமி­ழும் ஆங்­கி­ல­மும் கலந்த மொழி­யைப் பயன்­ப­டுத்­தும் வழக்­கத்தை நாம் தவிர்க்க முடி­யாது என்­றும் கூறி­னார் அவர்.

இந்­நி­லை­யில் தாய்­மொ­ழி­யில் நாட­கம் அரங்­கேற்­றும் நிறு­வ­னங்­க­ளுக்கு நிதிப் பொறுப்­பேற்­பும் நிதி உத­வி­யும் தேவை என்­றார் அகம் தியேட்­டர் லேப் அமைப்­பின் பேச்­சா­ளர்.