புது முயற்சியில் 'நெட்ஃபிளிக்ஸ்'

புது முயற்சியில் 'நெட்ஃபிளிக்ஸ்'

1 mins read

ஆரம்ப கட்­டத்­தில் உள்ள தன் வீடியோ விளை­யாட்­டுச் சேவையை, தொலைக்­காட்­சி­களுக்­குக் கொண்­டு­வர 'நெட்­ஃபி­ளிக்ஸ்' நிறு­வ­னம் திட்­ட­மி­டு­வதாகக் கூறப்­ப­டு­கிறது. மக்­கள் விளை­யா­டு­வ­தற்­குத் தங்­க­ளின் கைப்­பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் வச­தி­யும் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நிறு­வ­னம் 2021ல் 'ஐபோன்', 'ஐபேட்', 'ஆன்ட்­ராய்ட்' ஆகிய சாத­னங்­க­ளுக்­கான விளை­யாட்­டு­க­ளைத் தொடங்­கி­விட்­டது.

இதற்­கி­டையே, நெட்­ஃபி­ளிக்ஸ் நிறு­வ­னம் அதன் நிகழ்ச்­சி­கள் மற்­றும் திரைப்­படங்­க­ளின் வழி ஈட்­டும் வரு­மா­னத்­தோடு இந்த முயற்­சி­யிலும் இறங்க எண்­ணி­யி­ருப்­ப­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

சந்தா கட்­ட­ணத்தை உயர்த்­தும் திட்­டத்­தில் நிறு­வ­னம் இருப்­ப­தால் வாடிக்­கை­யா­ளர்­களைத் தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும் இப்­பு­திய முயற்சி கைகொ­டுக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இவ்­வாறு தொலைக்­காட்­சி­களில் வீடியோ விளை­யாட்­டு­களைக் கொண்டு வரும் திட்­டம் நிறு­வ­னத்­திற்கு விளம்­ப­ர­மா­க­வும் முக்­கிய மைல்­கல்­லா­க­வும் அமை­யும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

செய்தி: புளூம்­பெர்க்