வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட உரையாடல்களைபூட்டிவைத்துக்கொள்ளும் வசதி

வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட உரையாடல்களைபூட்டிவைத்துக்கொள்ளும் வசதி

1 mins read
8fea81ed-fb24-49e8-a3c7-c12ca83f8900
-

வாட்ஸ்­அப் பய­னர்­கள் குறிப்­பிட்ட சில தனிப்­பட்ட உரை­யா­டல்­க­ளைப் பூட்டி வைத்­துக்­கொள்­ளும் (Lock) வசதி விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

'சேட் கான்­டாக்ட்' அல்­லது 'குரூப் இன்ஃபோ'வைப் பயன்­ப­டுத்தி, பய­னர்­கள் தங்­க­ளது தனிப்­பட்ட உரை­யா­டல்­களை 'லாக்' செய்­து­கொள்­ள­லாம். வாட்ஸ்­அப்­பின் புதிய அம்­சங்­கள் குறித்த தக­வல்­களை அவ்­வப்­போது வெளி­யி­டும் 'WAbetainfo' இணை­யத்­த­ளத்­தில் இந்­தத் தக­வல் வெளி­யா­கி­யி­ருக்­கிறது.

அப்­படி 'பூட்டு' போடப்­பட்ட உரை­யா­டல்­கள் அனைத்­தும் 'லாக்டு சேட்' பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டு­வி­டும். வாட்ஸ்­அப்­பில் அப்­பட்­டி­யல் தனி­யா­கத் தோன்­றும்.

'பூட்டு' போடப்­பட்ட உரை­யா­டல்­க­ளைப் பய­னர் விரல்­ரேகை அல்­லது கடவு எண் (passcode) கொண்டு மட்­டுமே பார்க்­க­லாம். மற்­ற­வர்­கள் பார்க்க முடி­யாது.

ஒரு­வ­ரின் கைப்­பே­சியை இன்­னொ­ரு­வர் இர­வ­லா­கப் பெற­லாம். அப்­போது, அவர் அக்­கைப்­பே­சி­யில் உள்ள வாட்ஸ்­அப்­பைத் திறந்து அதற்­கு­ரி­ய­வ­ரின் உரை­யா­டல்­க­ளைப் பார்க்க வாய்ப்­புள்­ளது.

இந்­நி­லை­யில், 'லாக் சேட்' வச­தி­யால் இனி அத்­தொல்லை இருக்­காது எனச் சொல்­லப்­ப­டு­கிறது.