சிறார்கள் உடல் பருமனாக இருக்கும் பட்சத்தில் எடை குறைப்பது தொடர்பில் விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. இருப்பினும், ஆரோக்கியமற்ற அளவில் மிகவும் குறைந்த உடல் எடையுடைய சிறாருக்கும் உதவி தேவை என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.
உங்களின் பிள்ளை மிகவும் குறைந்த எடை உடையவராக இருக்கிறார் என நீங்கள் சந்தேகித்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில சமயம், குறைந்த எடைக்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்பில்லை. அவர்களின் 'பிஎம்ஐ' எனப்படும் உடல் எடை குறியீடு ஆரோக்கிய அளவில் இருக்கக்கூடும்.
இருப்பினும், குறைந்த உடல் எடையும் உடல் இளைப்பதும் மருத்துவ அல்லது மனரீதியான பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுவகைகளைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதற்குப் பதிலாக அவர்களுக்கு மூன்று வேளை உணவும் இரண்டு வேளை ஆரோக்கிய தின்பண்டங்களும் தரலாம்.
கலோரி அதிகமுள்ள ஆரோக்கிய உணவையும் அவர்களுக்குத் தரலாம். கடலை, கடலை வெண்ணெய், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், 'அவொகாடோ' பழம், ஆலிவ் எண்ணெய், இறைச்சி போன்றவற்றைப் பெற்றோர்கள் இதற்கெனக் கருதலாம்.
செய்தி: இணையம்

