'தமிழின் அழகே அழகு' நிகழ்ச்சி

'தமிழின் அழகே அழகு' நிகழ்ச்சி

1 mins read

தமி­ழின் அழகே அழகு என்ற தலைப்­பில் அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர் சங்­கம் பங்­கேற்­கும் தமிழ்­மொழி விழா உம­றுப் புல­வர் அரங்­கில் நாளை மறு­தி­னம் (ஞாயிற்­றுக்­கி­ழமை) மாலை 5.30 மணி­யி­லி­ருந்து நடை­பெற இருக்­கிறது.

அந்த விழா­வில் திரு ஜோ மல்­லூரி சிறப்­புப் பேச்­சா­ள­ராக பங்­கேற்­கி­றார். பள்ளி மாண­வர்­கள், பெற்­றோர் மற்­றும் ஆசி­ரி­யர்­கள் பங்­கேற்­கும் கலந்­து­ரை­யா­டலை முனை­வர் சிவ­கு­மா­ரன் வழி­ந­டத்த இருக்­கி­றார்.

ஏற்­பாட்­டுக்­குழுத் தலை­வரான திரு ராம­மூர்த்தி ராம்ஜி விழாவை வழிநடத்த இ­ருக்­கி­றார்.

'தமி­ழின் அழகே அழகு' (சிலப்­ப­தி­கா­ரம் வாயி­லாக) என்ற தலைப்­பில் பல பள்­ளி­களில் இருந்து ஐம்­பது மாண­வர்­கள் தங்­க­ளது ஆய்­வுக் கட்டு­ரை­களைச் சமர்ப்­பித்­த­தில் வெற்­றி­பெற்ற மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள்,பள்­ளி­கள், நடு­வர்­கள் மற்­றும் ஆத­ர­வா­ளர்­களுக்கு சிறப்பு விருந்­தி­னர் நினை­வுப் பரிசு வழங்­கிக் கெள­ர­விக்க இருக்­கி­றார்.

பங்­கெ­டுத்த அனைத்து மாண­வர்­களையும் ஊக்­கப்­ப­டுத்­தும் வகை­யில் காசோலை வழங்­கப்­பட இருக்­கிறது.