முட்டைகோசு, காலிஃபிளவர், புரக்கோலி போன்ற காய்கறிகளை உண்பது முக்கியம் என்பதை புதிய ஆய்வு ஒன்று வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சல்வேனியா மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளுக்கு புரக்கோலியை உணவாகத் தந்து ஆய்வை நடத்தினர்.
புரக்கோலி உண்டபோது எலிகளின் சிறுகுடலில் உள்ள உட்பூச்சு பாதுகாக்கப்பட்டதாகவும் அது நோய் தடுக்க உதவியதாகவும் ஆய்வில் தெரிய வந்தது. புரக்கோலியில் உள்ள அணுக்கள், சிறுகுடலின் உட்பூச்சில் உள்ள ஒரு வகைப் புரதத்துடன் ஒட்டிக்கொண்டது.
இப்புரதங்கள் நன்னீரையும் சத்துகளையும் சிறுகுடலுக்குள் அனுமதித்து, ஆபத்தான கிருமிகளையும் தடுக்கின்றன. புரக்கோலி உண்ட எலிகளுக்குப் புரதங்களின் செயல்பாடு மேம்பட்டது.