செவிப்புலன் காக்கலாம்

செவிப்புலன் காக்கலாம்

3 mins read
f440ac35-ed81-4f74-89ec-f631917d6053
-

காதொலிப்பான்கள் இன்று பலர் காதுகளிலிருந்து பிரிக்க முடியாதவை ஆகிவிட்டன. ஆனால் அவற்றைக் கவனமின்றி பயன்படுத்தினால் செவிப்புலன் இழப்பு நேரும் அபாயமுள்ளது.

அதனால் அவற்றைப் பாதுகாப் பாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். பாது­காப்­பற்ற நட­வ­டிக்­கை­க­ளால் ஒரு பில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட இளை­யர்­க­ளுக்கு நிரந்­தர செவிப்­பு­லன் இழப்பு ஏற்­ப­ட­லாம் என்­றும் அது தவிர்க்­கப்­ப­டக்­கூடிய ஒன்று என்­றும் உலக சுகா­தார நிறு­வ­னம் அண்­மை­யில் எச்­ச­ரித்­தது.

ஆனால் இளை­யர்­கள் மட்­டு­மல்ல பெரி­ய­வர்­களும் காதொலிப்­பான்­களை முறை­யாக அணியாத தால் செவிப்­பு­லன் குறை­யும் அபா­யத்­தில் உள்­ள­னர்.

காதொ­லிப்­பான்­களை அளவுக்கு அதி­க­மா­கச் சத்­த­மாக வைத்­துக் கேட்­ப­தால் செவிப்­பு­லன் இழப்பு அல்­லது டினிட்­டஸ் எனப்­படும் காது இரைச்­சல் ஏற்­படக்­கூ­டும்.

எவ்வளவு சத்தம், எவ்வளவு நேரம்

காதொ­லிப்­பான்­க­ளைக் கொண்டு கேட்­ப­வர்­கள், தங்­கள் கைப்­பேசி அல்­லது பிற கரு­வி­களில் உள்ள அதி­க­பட்ச சத்­தத்­தில் 60 விழுக்­காட்­டுக்கு மேல் வைக்­க­வேண்­டாம் என்று பிரிட்­ட­னின் தேசிய மருத்­து­வச் சேவை பரிந்­து­ரைத்­துள்­ளது.

அதி­க­பட்­சம் 60 நிமி­டங்­களுக்கு மேல் இவ்­வாறு காதொ­லிப்­பான்­க­ளைக் கொண்டு கேட்க வேண்­டாம் என்­றும் ஒவ்­வொரு மணி நேரத்­துக்­கும் ஐந்து முதல் 20 நிமி­டங்­கள் வரை இடை­வெளி விட வேண்­டும் என்­றும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.

காதொ­லிப்­பான்­கள் வழி கேட்­கத் தொடங்­கும்­போது சத்­தத்தை மிகக் குறை­வாக வைத்­து­விட்டு பின்­னர் தேவைப்­பட்­டால் அதை அதி­க­ரித்­துக் கொள்­ள­லாம்.

எடுத்த எடுப்­பில் அதிக சத்­தம் வைத்­தால் அது அள­வுக்கு அதி­க­மா­னது என்­றா­லும் காது­கள் அதற்­குப் பழ­கிக்­கொள்­ளும்.

மேலும் வெளி­யில் கேட்கும் இரைச்சலை மறைக்க காதொ­லிப்­பான்­க­ளின் ஒலியை அதி­க­ரிக்க வேண்­டாம் என்று ஆலோ­சனை கூறப்­ப­டு­கிறது.

பெரி­ய­வர்­கள் 80 டெசி­பல் அளவு சத்­தத்­துக்­கும் குறை­வா­க­வும் ஒரு வாரத்­தில் 40 மணி நேரத்­துக்கு மேற்­போ­கா­ம­லும் கேட்­க­வேண்­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் பரிந்துரைத்­துள்­ளது.

சிறு­வர்­கள் கேட்­கும் சத்­தம் வாரத்­தில் 40 மணி நேரத்­துக்­குக் குறை­வா­க­வும் 75 டெசி­ப­லுக்­குக் கீழே­யும் இருக்க வேண்­டும் என்று அது கூறி­யுள்­ளது.

ஆனால் தனிப்­பட்ட கரு­வி­களில் 136 டெசி­பல் வரை சத்­தம் இருக்­க­லாம் என்று அது எச்­ச­ரித்­தது. 85 டெசி­பல் சத்­தத்­தை­விட 88 டெசி­பல் சத்­தம் இரட்­டிப்பு இரைச்­சல் மிகுந்­தது.

இந்­நி­லை­யில் 136 டெசி­பல் சத்­தத்­தைச் சில விநா­டி­கள் கேட்­டா­லும் அதனால் செவி­க­ளுக்கு நிரந்­தர பாதிப்பு ஏற்­ப­ட­லாம்.

காதொ­லிப்­பான் வகை­கள்

சத்­தத்­தைக் குறைத்து வைப்­ப­தைத் தவிர்த்து, தாங்­கள் பயன்­ப­டுத்­தும் காதொ­லிப்­பான்­களில் கவ­னம் செலுத்­து­வ­தும் முக்­கி­யம்.

கம்­பி­யுள்­ளவை (வயர்ட்), கம்­பி­யில்­லா­தவை (வயர்­லஸ்) , அதி­லும் காதை மூடும் பெரிய 'இயர்­ஃபோன்' தலை­யணி ஒலிப்­பான், காதுக்­குள்ளே ஆழ­மா­கச் செரு­கும் 'இயர்­பட்ஸ்' காதொ­லிப்­பான், எலும்புவழி ஒலியைக் கடத்தும் (போன் கண்டக்‌ஷன்) ஒலிப்பான் கள் எனப் பல­வ­கை­கள் உண்டு.

இவற்­றில் 'வயர்­லஸ் இயர்­பட்ஸ்' எனப்­படும் கம்­பி­யில்லா காதொ­லிப்­பான்­கள் மிகச் சிறி­யவை. அவை தற்­போது பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

ஆனால் காது­க­ளுக்­குள் செரு­கும் 'இயர்­ஃபோன்' அல்­லது 'இயர்­பட்ஸ்' வகை­க­ளை­விட காது­களை மூடும் தலை­யணி ஒலிப்­பான்­கள் செவிப்புலனுக்குக் குறை­வான சேதத்தை ஏற்­ப­டுத்­தும் என்று கூறப்­ப­டு­கிறது.

இவ்­வகை ஒலிப்­பான்­க­ளைக் காதுக்­குள் செரு­கு­வ­தில்லை என்­பதே அதற்கு முக்­கிய கார­ணம்.

மேலும், வெளி­யி­லி­ருந்து கேட்­கும் அதி­கப்­ப­டி­யான சத்­தத்­தைத் தடுக்­கும் ஒலித் தடுப்பு (நாய்ஸ் கேன்­ச­லிங்) ஆற்­ற­லுள்ள தலை­யணி ஒலிப்­பான்­களை அணி­வது சிறந்­தது என்று நிபு­ணர்­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.