இந்திய முஸ்லிம் பேரவை நடத்திய நோன்பு துறப்பு நிகழ்ச்சி

இந்திய முஸ்லிம் பேரவை நடத்திய நோன்பு துறப்பு நிகழ்ச்சி

1 mins read
695938f0-a47b-4b03-948b-de526627079a
-

ஸேக்-சலாம் இந்­தியா, சிங்­கப்­பூ­ரில் உள்ள இந்­திய முஸ்­லிம் அமைப்­பு­க­ளின் கூட்­ட­மைப்­பான இந்­திய முஸ்­லிம் பேர­வை­யு­டன் இணைந்து ஏப்­ரல் 1ஆம் தேதி சமூக நோன்பு துறப்­பு நிகழ்ச்சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

பல்­லின மக்­கள் கிட்­டத்­தட்ட 1,000 பேர் இந்நிகழ்­வில் கலந்துகொண்டு நோன்பு துறந்­த­னர். அனை­வ­ருக்­கும் நோன்புக் கஞ்சி, குளிர்­பா­னம், இறைச்சி பிரி­யாணி வழங்­கப்­பட்­டன.

சிறப்பு விருந்­தி­ன­ராக சிங்­கப்­பூர் மலாய் வர்த்­தக தொழில் சபை­யின் தலை­வர் பரீத்­ கான் கலந்துகொண்­டார்.

இந்­திய முஸ்­லிம் பேர­வையை 1992ல் நிறுவி அத­னு­டைய சமூ­கப் பங்­க­ளிப்­பு­களில் தொடர்ந்து பய­ணித்­து­வ­ரும் அமைப்­பு­களுக்கு சிறப்பு செய்­யப்­பட்­டது.

இந்­திய முஸ்­லிம் பேர­வையை நிறுவப் பாடு­பட்­ட­வர்­களில் ஒருவரான முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மறைந்த எம்.கே.ஏ. ஜப்­பார், இபுறா­ஹீம் மரைக்­கான் போன்­றோர் உட்­பட முன்­னாள், இந்­நாள் பங்­காளி அமைப்­புத் தலை­வர்­க­ளுக்­குப் பாராட்டு வழங்­கப்­பட்­டது.

அத்துடன் இந்­திய முஸ்­லிம் பேர­வைத் தலை­வர் முஹம்­மது பிலால், முன்னாள் துணை அமைச்சரும் குவைத்­துக்­கான சிங்­கப்­பூர் தூத­ரு­மான ஸைனுல் அபி­தீன் ரஷீத், பேரவை உரு­வாகப் பேரா­தரவு வழங்­கி­யதை நினைவு கூர்ந்­தார்.

செய்தியும் படமும்:

இந்திய முஸ்லிம் பேரவை