இந்திய மரபுடைமை நிலையத்தில் புத்தாண்டு

இந்திய மரபுடைமை நிலையத்தில் புத்தாண்டு

1 mins read

இந்­திய புத்­தாண்டை இனிப்­பு­டன் வர­வேற்க புத்­தாண்­டுப் பொது வருகை நிகழ்வை இந்­திய மர­பு­டைமை நிலை­யம் நடத்­த­வுள்­ளது.

இவ்­வாண்­டின் பொது வருகை நிகழ்வு இனிப்பு வகை­க­ளைக் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்­டி­ருக்­கும்.

ஏப்­ரல் 15, 16ஆம் தேதி­களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பல நட­வ­டிக்­கை­களில் மக்­கள் பங்­கேற்­க­லாம்.

நேரடி கலை நிகழ்ச்­சி­கள் காலை 11 மணிக்­கும் மாலை 4 மணிக்­கும் தின­மும் நடை­பெ­றும். இரு நாள்­க­ளி­லும் கைவினை நட­வ­டிக்­கை­களில் முதல் 600 வரு­கை­யா­ளர்­கள் இல­வ­ச­மாக கலந்­து­கொள்­ள­லாம். வருகை தரும் அனை­வ­ருக்­கும் இல­வச இனிப்­பு­களும் தேநீ­ரும் வழங்­கப்­படும்.

வழி­காட்­டி­கள் உடன்­வரும் மர­பு­டைமை நிலைய சுற்­று­லாக்­கள், 'லிட்­டில் இந்­தியா இனிப்புப் பாதை' மர­புப் பய­ணம் போன்­றவை ஏப்­ரல் 15ஆம், 16ஆம் தேதி­களில் காலை 11 மணிக்கு தொடங்­கும்.

சிறு­வர் களுக்­கான கதை­சொல்­லல், கை வினை அங்­கங்களும் இரு நாட்­களி­லும் உண்டு.

சனிக்­கி­ழமை 16ஆம் தேதி பண்­டி­கைக் கால இனிப்­பு­வ­கை­கள், காரம் ஆகி­ய­வற்றை சமை­யல் வல்­லு­நர் தேவகி சண்­மு­கம் சமைத்­துக் காட்­டி விளக்குவார்.

மேலும், பூ மாலை தயா­ரிக்­கும் பட்­டறை, பிர­ப­ல­மான 'பாலி­வுட்' நடன முறைப் பயி­ல­ரங்கு போன்­றவை இடம்­பெ­றும்.

$10 முதல் $20 கட்­ட­ணத்­தில் நடத்­தப்­படும் பயி­ல­ரங்­கு­க­ளி­லும் நட­வ­டிக்­கை­க­ளி­லும் கலந்­து­கொள்ள விருப்­பம் உள்­ள­வர்­கள் 'பீட்டிக்ஸ்' இணை­யத்­தளத்­திற்­குச் சென்று அனு­மதிச் சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

இணைய முகவரி: www.ihc-programmes.peatix.com