வசந்தம் மலரும் சித்திரைப் புத்தாண்டு

வசந்தம் மலரும் சித்திரைப் புத்தாண்டு

2 mins read
ab657cd5-f809-48f9-800d-cd5b9ef28399
-
multi-img1 of 6

தமிழர், சீக்கியர், அசாமியர், மலையாள சமூகத்தினர் எனப் பல்வேறு இந்திய சமூகத்தினர் தங்களது புத்தாண்டை அடுத்த இரு நாளில் கொண்டாடுவதைப் போல தாய்லாந்து, கம்போடியா, மியன்மார், லாவோஸ் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் தொடங்கியுள்ள புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அடுத்த சில நாள்களுக்குத் தொடரும். இக்கொண்டாட்டங்கள் பல வண்ணங்கள் கொண்ட ஒரே இழை நாம் என்று எடுத்துரைக்கின்றன.

புத்­தாண்டு, ரம­லான் நோன்பு, புனித வெள்ளி, ஈஸ்­டர் என தெற்­கா­சி­யா­வி­லும் தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லும் உள்ள பல்­வேறு சமூ­கத்­தி­ன­ருக்கு இது வழி­பா­டு­களும் கொண்­டாட்­ட­மும் நிறைந்த கால­கட்­டம்.

பல்­வேறு இந்­திய சமூ­கங்­ களின் வழக்­கப்­படி வசந்தகாலம் தொடங்கி, வடக்­கி­லி­ருந்து தெற்­கு­நோக்­கிச் செல்­லும் சூரி­யன் நில­ந­டுக்­கோட்டை அடைந்து, பக­லும் இர­வும் சம­மாக இருக்­கும் நாள் புத்­தாண்­டா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது யுள்­ள­தைக் குறிக்­கும் வகை­யில் தெலுங்கு வரு­டப் பிறப்­பான உகாதி மார்ச் 22ஆம் தேதி கொண்­டா­டப்­பட்டு விட்­டது.

சித்­திரை மாதத்­தின் முதல் நாளில், அதா­வது ஏப்­ரல் 14ஆம் தேதி, புத்­தாண்டு கொண்­டா­டப்­ப­டு­கிறது. புதிய ஆண்­டின் பெயர் சோப­கி­ருது என்று இந்­துக்­க­ளின் பஞ்­சாங்­கம் தெரி­விக்கிறது.

புத்­தாண்­டன்று அதி­கா­லை­யில் குளித்­து­விட்டு புத்­தா­டை­கள் அணிந்­துக் கோயி­லுக்­குச் சென்று வழி­ப­டு­வது பல­ரது வழக்­கம். வேலை நாளில் பல­ரா­லும் அதைச் செய்ய முடி­யா­விட்­டா­லும் வீட்­டில் வழி­பா­டு­கள் நடை­பெ­றும்.

புத்­தாண்டு நாளில் மா, பலா, வாழை ஆகிய முக்­க­னி­கள், வெற்­றிலை, பாக்கு, நகை­கள், நெல் முத­லா­ன­வற்­றை வழி­பாட்­டு அ­றை­யில் வைத்து வழி­ப­டு­வது வழக்­கம்.

மலை­யா­ளச் சமூ­கத்­தி­ன­ரும் விஷுக் கனி என்று அழைக்­கப்­படும் இம்­ம­ர­பைக் கடைப்­பி­டிப்­பர். காலைக் குளி­யலை முடித்­து­விட்டு வளத்­தைக் குறிக்­கும் பல்­வேறு பொருள்­களை முத­லில் பார்ப்­பது சிறப்பு என்­பது அவர் களின் நம்­பிக்கை.

தமி­ழர் மர­புப்­படி புத்­தாண்டு நாளில் உண­வில் அறு­சு­வை­யும் இருப்­பது சிறப்பு என்று கரு­தப்­ ப­டு­கிறது. பொது­வாக தமி­ழர் பண்­டிகை நாள்­களில் பாகற்­கா­யைத் தவிர்ப்­பார்­கள். ஆனால் அனைத்­தும் கலந்­த­து­தான் வாழ்க்கை என்­ப­தைக் குறிக்க இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய அறுசுவையும் அன்றைய உணவில் இடம்பெறும்.

தமி­ழர்­க­ளைப் போலவே, பல்­வேறு இந்­திய சமூ­கத்­தி­னரும் ஏப்­ரல் 14ஆம் தேதியை புத்­தாண்­டா­கக் கொண்டாடிவரு­கின்­ற­னர். அசா­மி­யர் உள்­ளிட்ட வட­கி­ழக்கு இந்­தி­யர்­கள் போஹக் பிஹு என்ற பெய­ரி­லும், சீக்­கி­யர் வைசாக்கி என்­றும், பீகார் மக்­கள் மைதிலி புத்­தாண்டு என்­றும் அந்­நாளை அழைக்­கின்­ற­னர்.

மலை­யா­ளச் சமூ­கத்­தி­ன­ரின் புத்­தாண்­டான விஷு சனிக்­கிழமை ஏப்­ரல் 15ஆம் தேதி கொண்­டா­டப்­படும். புத்­தாண்­டின் சத்யா விருந்து அந்­நா­ளின் மற்­றொரு சிறப்­பா­கும்.

லாவோஸ், கம்­போ­டியா, மியன்­மார், தாய்­லாந்து ஆகிய வற்றில் கெமர் இனத்தவருக்கான புத்­தாண்டு இன்று தொடங்கி ஞாயிற்­றுக்­கி­ழமை வரை நடை­பெ­றும். தாய்­லாந்­தில் சொங்­ரான், லாவோ­சில் பி மாய், கம்­போ­டி­யா­வில் சங்­க­ராந்தா, மியன்­மா­ரில் திங்­யென் என்­ற பெயர்களில் புத்தாண்டு அழைக்கப்படுகிறது.