செடிகள் வளர்த்து மனம் மகிழலாம்

செடிகள் வளர்த்து மனம் மகிழலாம்

1 mins read
26cdd00f-89f3-4e25-86bc-e510e69eabdb
-

இன்­றைய சூழலில் பெரும்­பா­லா­ன­வர்­கள் தங்­கள் நேரத்­தில் 80 முதல் 90 விழுக்­காட்­டைக் கட்­ட­டங்­க­ளுக்­குள்­ளேயே கழிக்­கின்­ற­னர். கட்­ட­டங்­க­ளுக்­குள்ளே காலத்­தைக் கழிப்­ப­வர்­க­ளுக்கு இயற்­கை­யு­டன் தொடர்பு ஏற்­பட வீட்­டுச் செடி­கள் எளிய வழி­யாக உள்­ளன.

வீட்­டில் செடி­களை வளர்க்­கும்­போது மன அழுத்­த­மும் ரத்த அழுத்­த­மும் குறை­வ­து­டன் மன­நிலை மேம்­படும்.

அலு­வ­ல­கத்­தில் செடி­கள் இருக்­கும்­போது வேலை­யில் நிறைவு கூடும் என்­றும் உடல்­ந­லம் குறித்த புகார்­கள் குறை­யும் என்­றும் ஆய்­வு­கள் கூறி­யுள்­ளன.

பிரிட்­ட­னின் ரீடிங் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­கள் நடத்­திய ஆய்வில் பல்­வகை வீட்­டுச் செடி­கள் பங்­கேற்­பா­ளர்­க­ளி­டம் காட்­டப்­பட்­டன. பார்ப்­ப­தற்கு அழ­கா­க­வும் பசு­மை­யா­க­வும், இலை­கள் நிறைந்த அடர்த்­தி­யான செடி­களை அதி­க­மா­னோர் விரும்­பி­னர். அவை தங்­க­ளுக்கு அதிக மகிழ்ச்சி தந்­த­தாகப் பலர் ஆய்­வில் கூறி­னர்.

மேலும், வட்­ட­மான இலை­கள் உள்ள செடி­கள் மனம் இளைப்­பாற உத­வி­ய­தா­கக் கூறப்­பட்­டது. குறு­கிய இலை­கள், முள்ளிருக்கும் அல்லது இலை குறைவான செடி­களை அவர்­கள் விரும்­ப­வில்லை.

எளி­தில் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய, அதி­கம் தண்­ணீர் தேவைப்­ப­டாத, பசு­மை­யான செடி­களை வீட்­டில் அல்­லது அலு­வ­ல­கத்­தில் வைக்­க­லாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.