தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ச் சோலை திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையப் போவதை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவுக்கும் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கத்தில் (கீழ்த்தளம் பி1) நிகழ்ச்சி நடைபெறும்.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் அழகிய தமிழில் பேசிக் கவர்பவருமான தாமஸ் ஹிட்டோஷி, 'கழிபெருங் காரிகை: திருக்குறளில்(ன்) அழகு' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.
வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ் மொழி விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்நிகழ்ச்சி அமையும். பிற்பகல் 1.45 மணிக்குள் இருக்கையில் அமரும்படி நூலக வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

