சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஆண்டுதோறும் நிகழ்த்தும் பாவேந்தர் 133 சுழலும் சொற்போர் இலக்கிய நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தின் 16ஆம் மாடியில் நடைபெறும்.
தமிழ் மொழி விழாவை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெறும்.
'பாவேந்தர் பாரதிதாசனை புரட்சி கவிஞனாக்கியது அவரின் பொதுவுடைமைச் சிந்தனையா? சமூகச் சீர்திருத்த சிந்தனையா? மொழியுணர்வு சிந்தனையா?' என்ற தலைப்பில் நிகழ்ச்சி இடம்பெறும்.
சிறப்பு பேச்சாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் த இராமலிங்கம் கலந்துகொள்வார்.
சமூகம், மொழி பொதுச்சேவை போன்ற பணிகளில் சிறந்திருக்கும் ஒருவருக்கு முந்தைய ஆண்டுகளைப் போல பாவேந்தர் பாரதிதாசன் பொற்பதக்க விருது வழங்கப்படும்.
நிகழ்வில் நாட்டியம், கவியுரை நோக்கவுரை போன்ற அங்கங்களும் உண்டு.

