உழைக்க வந்தோரை உடனழைத்து உபசரிப்பு

உழைக்க வந்தோரை உடனழைத்து உபசரிப்பு

1 mins read

நோன்பின் மாண்பைப் பறைசாற்றிய நிகழ்வு

நோன்­புப் பெரு­நா­ளை­யொட்டி புலம்­பெ­யர்ந்த வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான நோன்பு துறப்பு நிகழ்வு அண்­மை­யில் நடை­பெற்­றது. இந்­திய முஸ்­லிம் பேர­வை­யின் இளை­யர் பிரி­வின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில், 1,000க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பங்­கு­கொண்­ட­னர்.

இம்­மா­தம் 9ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட் வட்­டா­ரத்­தில் உள்ள பெஞ்­சுரு மன­ம­கிழ் மன்­றத்­தில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் பங்­கு­கொண்ட அனை­வ­ருக்­கும் நோன்­புக் கஞ்சி, பழங்­கள், தின்­பண்­டங்­க­ளு­டன் பிரி­யா­ணி­யும் வழங்­கப்­பட்­டது.

ஜாலான் புசார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் ஜாலான் புசார் நகர மன்­றத் தலை­வ­ரு­மான டாக்­டர் வான் ரிசால் இந்­நி­கழ்­வின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்­றார்.

"சமய நிகழ்­வாக இருந்­த­போ­தி­லும் பிற இன, சம­யத்­தைச் சார்ந்த வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பங்­கு­கொண்­டது நம்­மு­டைய ஒற்­று­மை­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் காட்­டு­கிறது," என்று அவர் கூறி­னார்.

"பண்­டி­கைக் காலங்­க­ளைப் பார­பட்­ச­மின்றி அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து கொண்­டாட வேண்­டும். இந்­நி­கழ்­வில் அனை­வ­ரும் பங்­கு­கொண்டு மகிழ்ந்­தது மன­நி­றை­வை­ய­ளிக்­கிறது," என்று இந்­திய முஸ்­லிம் பேர­வைத் தலை­வர் முஹம்­மது பிலால் கூறி­னார்.

பெரும்­பான்­மை­யான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கி­யுள்ள விடு­தி­கள் உள்ள பகு­தி­யில் இந்­நி­கழ்வு நடை­பெற்­றது தாங்­கள் கலந்­து­கொள்ள வச­தி­யாக இருந்­த­தா­க­வும் நண்­பர்­க­ளு­டன் பண்­டி­கைக் காலங்­களில் நேரம் செல­வ­ழிப்­பது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தா­க­வும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தெரி­வித்­த­னர்.