தோழனாய் துணைநிற்கும் இந்து சமய அமைப்பு

தோழனாய் துணைநிற்கும் இந்து சமய அமைப்பு

1 mins read
671ab288-03a4-4a5a-befc-7efc3c262f62
-

புனித ரம­லான் மாத நோன்பை ஒட்டி லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தி­லுள்ள ஐந்து பள்­ளி­வா­சல்­க­ளுக்­கும் இஸ்­லா­மிய சம­யத்­தைச் சேர்ந்த வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்குவிடு­தி­க­ளுக்­கும் 825 கிலோ­ பேரீச்­சம்­ப­ழங்­களை இந்து அறக்­கட்­டளை வாரி­யம் அன்­ப­ளிப்­பாக வழங்­கி­யுள்­ளது.

சிராங்­கூன் சாலை­ அங்­கு­லியா பள்­ளி­வா­ச­லில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் இந்து அறக்­கட்­டளை வாரிய உறுப்­பி­ன­ரும் ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயி­லின் துணைத் தலை­வ­ரு­மான தாம் சண்­மு­கம், அங்­கு­லியா பள்­ளி­வா­சல் தலை­வர் கமால் அங்­கு­லி­யா­வி­டம் அன்­ப­ளிப்பை வழங்­கி­னார். டன்­லப் ஸ்தி­ரீட்­டி­லுள்ள அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­சல் மற்­றும் 'அல்வி பள்­ளி­வா­சல், ஜாமியா சூலியா பள்­ளி­வா­சல், பென்­கூ­லன் பள்­ளி­வா­சல் ஆகி­ய­ன­வும் அன்­ப­ளிப்­பைப் பெற்­றுக்­கொண்­டன.

ஐந்து தங்­கு­வி­டு­தி­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 7,500 வெளி­நாட்டு முஸ்­லிம் ஊழி­யர்­கள் நோன்பு வைப்­ப­தற்­காக பேரீச்­சம்­ப­ழங்­கள் வழங்­கப்­பட்­டன.

ஆறு ஆண்­டு­க­ளாக அங்­குலியா பள்­ளி­வா­ச­லில் தொழு­கையை முன்நின்று வழி­ந­டத்­தும் இமாம் சாஹூல் ஹமீது பாரூக் அக­மது, "இது இரு சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான உறவை வலுப்­படுத்­து­கிறது," என்று குறிப்பிட்டு நன்­றி தெரி­வித்­துக்­கொண்­டார்.