பிரவீண் குமாரின் 'ஃபேமிலி மேன் ரிட்டர்ன்ஸ்'

பிரவீண் குமாரின் 'ஃபேமிலி மேன் ரிட்டர்ன்ஸ்'

1 mins read

சிங்­கப்­பூர் மக்­களை மீண்­டும் குதூ­க­லப்­ப­டுத்த 'ஃபேமிலி மேன் ரிட்டர்ன்ஸ்' என்ற புதிய தலைப்­போடு வரு­கி­றார் நகைச்­சுவைக் கலை­ஞர் பிர­வீண் குமார்.

'ஸ்டாண்ட் அப்' எனப்­படும் நகைச்­சுவை பாணி படைப்­பு­க­ளால் பிர­ப­லம் அடைந்­த­வர் பிர­வீண் குமார். 'யூடியூப்' தளத்­தில் பல மில்­லி­யன் காட்­சி­களைத் தன் பக்­கத்­தில் திரட்­டும் இவர் 'காமிக்ஸ்­டான்' நகைச்­சுவை தொலைக்­காட்சிப் போட்டி நிகழ்ச்­சி­யில் நடு­வ­ரா­க­வும் இருந்­தி­ருக்­கி­றார். 'ஃபேமிலி மேன் ரிட்டர்ன்ஸ்' நகைச்­சுவை நிகழ்ச்சி ஏப்­ரல் 22ஆம் தேதி 'தி சிங்­போஸ்ட்' அரங்­கத்­தில் இடம்­பெ­றும். நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு தொடங்­கும்.

$35 முதல் $75 வரை­யி­லான அனு­ம­திச் சீட்­டு­களை 'டிக்­கெட்­டெர்' இணை­யத்­த­ளத்­தில் வாங்கலாம்.