கேன்பரா சமூக மன்றத்தில் பட்டிமன்றம்

கேன்பரா சமூக மன்றத்தில் பட்டிமன்றம்

1 mins read

கேன்­பரா சமூக மன்­றத்­தின் இந்­தியர் நற்­ப­ணிக் குழு­வின் ஏற்­பாட்­டில் ஆண்­டு­தோ­றும் நடக்­கும் சித்­தி­ரைத் திரு­விழா நிகழ்ச்­சி­யில் இந்த ஆண்டு பட்­டி­மன்­ற­ம் நடக்க இருக்கிறது.

சித்­தி­ரைத் திரு­வி­ழாவை முன்­னிட்டு தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கம் 'மரி­யாதை என்­பது இன்று வய­துக்கே/

திற­மைக்கே' என்ற தலைப்­பில் பட்­டி­மன்­றம் ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருக்­கிறது.

இந்­தப் பட்­டி­மன்­றம் இம்­மா­தம் 23ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 10 மணி­ய­ள­வில் கேன்­பரா சமூக மன்­றத்­தில் நடை­

பெ­றும்.

பட்­டி­மன்­றத்­தின் நடு­வ­ராக திரு யூசுப் ராவுத்­தர் ரஜித் செயல்­பட, வய­துக்கே என்ற அணி­யில் முனை­வர் ராஜி ஸ்ரீநி­வா­சன்,

திரு நிர்­மல், செல்­வன் ப்ர­பவ் ஆகி­யோ­ரும், திற­மைக்கே என்ற அணி­யில் திரு­மதி இசக்­கி­செல்வி, திரு­மதி நபிலா நஸ்­ரின், செல்­வன் ரோகித்­கு­மார்

ஆகி­யோ­ரும் பேச­ இ­ருக்­கி­றார்­கள்.

இந்நிகழ்ச்சியுடன் பாலர் பள்ளிச் சிறு­வர்­கள், தொடக்­க­நிலை ஒன்று முதல் மூன்று வரை­யுள்ள மாண­வர்­க­ளுக்கு ஆடை அலங்­காரப் போட்டியும் நடை­

பெ­றும்.

மேலும் சைவ உணவு, சமூக மன்­றத்­தின் மற்ற நிகழ்ச்­சி­க­ளை­யும் கண்­டு­க­ளிக்க நுழை­வுக் கட்­ட­ணம் 5 வெள்ளி வசூ­லிக்­கப்­ப­டு­கிறது.

பட்­டி­மன்­றத்­தில் பார்­வை­யா­ளர்­க­ளாகக் கலந்­து­கொண்டு மற்ற நிகழ்ச்­சி­க­ளி­லும் கலந்­து­கொள்ள தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கம் அழைக்­கிறது.

மேல்­வி­வரங்­க­ளுக்கு 90016400 என்ற எண்­ணில் திரு ரஜித்­தைத் தொடர்­பு­கொள்­ள­வும்.