முன்னாள் கைதிகளின் குடும்பங்களுக்கு ரமலான் உற்சாகம்

2 mins read
ca55d628-131e-41c1-bcd4-fe001966227f
-

நியூ­ஜென் ஃபண்ட் 2018ஆம் ஆண்டு முதல் ரம­லான் மாதத்­தில் முன்­னாள் கைதி­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு இஃப்தார் அன்­ப­ளிப்­பு­களை வழங்கி வரு­கிறது.

லாப­நோக்­க­மற்ற அமைப்­பான நியூ­ஜென் ஃபண்ட் திருந்­திய கைதி­க­ளின் குடும்­பங்­களில் தலை­முறை தாண்­டிய குற்­றச்­

செ­யல்­க­ளைத் தடுப்­ப­தற்கு முனை­கிறது. இது குடும்­பங்­க­ளு­டன் நெருங்கி, முக்­கி­ய­மாக பிள்­ளை­க­ளின் நல­னைக் கவ­னத்­தில்­கொண்டு அதற்கு உதவி வரு­கிறது. இது­வரை ஏறத்­தாழ ஆயி­ரம் பிள்­ளை­கள் நியூ­ஜென்­னின் திட்­டங்­கள், சேவை­க­ளால் பய­ன­டைந்­துள்­ள­னர். இந்த ஆண்­டும் 140 குடும்­பங்­க­ளுக்கு இஃப்தார் அன்­ப­ளிப்­பு­களை வழங்கி சிறப்­பித்­தது.

போதைப்பொருள் விற்­ப­னைக்­காக கண­வர் பன்­னி­ரண்டு ஆண்­டு­கால சிறை­வா­சம் சென்­ற­போது பத்­து­மாத கைக்­கு­ழந்­தை­யு­டன் தனி­யாக விடப்­பட்­டார் திரு­வாட்டி சலிமா (உண்மைப் பெய­ரல்ல).

நீண்­ட­கால விசா­வில் சிங்­கப்­பூ­ருக்கு வந்து, தமி­ழ­கத்­தில் பிளஸ் 2 வரை மட்­டுமே பயின்­றி­ருந்த அவ­ருக்கு உதவ குடும்­பத்­தாரோ நண்­பர்­களோ யாரும் இல்லை.

தற்­போது இல்­லப் பணி­யா­ள­ராக மாதம் $1,500 மட்­டுமே ஈட்டி வரும் அவ­ருக்­கும் அவ­ரின் 13 வயது மக­னுக்­கும் கடந்த மூன்­றாண்டு கால­மாய் கைகொ­டுத்து வரு­கிறது நியூ­ஜென் ஃபண்ட்.

திருவாட்டி சலிமா உள்­ளிட்ட முன்­னாள், தற்­ச­ம­யம் சிறை யிலிருக்கும் கைதி­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் ரம­லான் உற்­சா­கத்­தைப் பரப்ப முற்­பட்­டது நியூ­ஜென் ஃபண்ட் அமைப்பு. ஏப்­ரல் 12ஆம் தேதி அன்று மாலை காத்­திப் வட்­டார உள்­து­றைக் குழு NS மன்­றத்­தில் கிட்­டத்­தட்ட 500 பேர் ஒன்­று­கூடி இஃப்தார் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­னர்.

நியூ­ஜென்­னின் இஃப்தார் அன்­ப­ளிப்­பு­க­ளைப் பெற்­றுக்­கொண்டு கொண்­டாடி மகிழ்ந்த 140 குடும்­பங்­களில் திரு­வாட்டி சலி­மா­வும் அவ­ரின் மக­னும் அடங்­கு­வர். இல­வச துணைப்­

பா­டத் திட்­டம் அவ­ரின் மக­னது கல்­விக்­குப் பக்­க­ப­ல­மாய் இருந்து வரு­கிறது.

"பொது நிகழ்­வு­க­ளுக்கோ கொண்­டாட்­டங்­க­ளுக்கோ செல்­லும்­போது எங்­களை சிலர் வித்­தி­யா­ச­மாகப் பார்ப்­ப­துண்டு. அது எங்­களை சங்­க­டப்­ப­டுத்­தும். நியூ­ஜென் நிகழ்­வு­க­ளிலோ எங்­க­ளைப் போன்­றோ­ரைச் சந்­திக்க முடி­கின்­றது.

"எனது மக­னுக்கு நண்­பர்­கள் கிடைத்­துள்­ள­னர். இங்கு நாங்­கள் அர­வ­ணைக்­கப்­ப­டு­கி­றோம்; குடும்­ப­மாக திகழ்­கி­றோம்," என்­றார் 35 வயது திரு­வாட்டி சலிமா.

நோய்ப்­ப­ர­வல் காலத்­துக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக நேரடி நிகழ்­வாக நடை­பெ­றும் நியூ­ஜென்­னின் இஃப்தார் கொண்­டாட்­டத்­தில் உள்­துறை துணை அமைச்­சர் டாக்­டர் முக­மது ஃபைஷல் இப்­ரா­கிம் கலந்­து­கொண்­டார். தேசிய வளர்ச்­சித் துணை அமைச்­ச­ரு­மான அவர், ஒரு சமூ­க­மாக குடும்­பப் பிணைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கும் பல்­லி­னத்­தோ­ரும் ஒன்­று­கூடி மகிழ்­வ­தற்­கும் இது­போன்ற கொண்­டாட்­டங்­கள் வாய்ப்­ப­ளித்­த­தாகக் கூறி நியூ­ஜென்­னின் இம்­மு­யற்­சி­யைப் பாராட்­டி­னார்.

டாக்­டர் ஃபைஷல் இப்­ரா­கிம், பிள்­ளை­களே நமது எதிர்­கா­லம் என்­பதை வலி­யு­றுத்­தி­னார்.

நியூ­ஜென் போன்ற அமைப்­பு­க­ளு­டன் இணைந்து அர­சாங்­கம் தொடர்ந்து பிள்­ளை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும், அவர்­கள் உகந்த முறை­யில் வளர்­வ­தற்கு உத­விக்­க­ரம் நீட்­டும் என்­றும் அவர் உறு­தி­ய­ளித்­தார்.

மாது அன்பளிப்பு பைகளைப் பெற்றுக்கொண்டார்.