'சமூக ஊடகங்கள் வரமா
அல்லது சாபமா' எனும் தலைப்பை ஒட்டி, சொல்வேந்தர் திரு சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர்கள் சிங்கப்பூரில் விவாதிக்க வுள்ளனர்.
மாஸ்க் ஸ்டூடியோஸ், கேஎஸ் டாக்கீஸுடனும் சீதா மீடியாவுடனும் இணைந்து இந்த பட்டிமன்றத்திற்கு
ஏற்பாடு செய்துள்ளது.
முதன்முறையாக சிங்கப்
பூரில் கார்னிவல் திரையரங்கத்தில் நடக்கும் இந்தப் பட்டி
மன்றம் மே 20ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடக்கவுள்ளது.
சொல்வேந்தர் திரு சுகி சிவம், திரு ராம்குமார், திரு தேவகோட்டை ராமநாதன்,
திருமதி அறந்தாங்கி நிஷா, திரு மனோஜ் பிரபாகர்,
திருமதி சாந்தாமணி, திரு மோகன சுந்தரம் ஆகியோர் பட்டிமன்றத்துக்கு சிறப்பு சேர்க்க உள்ளார்கள்.
இப்பட்டிமன்றம் சிந்தனை யைத் தூண்டும் வண்ணம் இருக்கும் என்றும் வெளி நாட்டுப் பார்வையாளர்களுக்கும் இந்நிகழ்ச்சியைக்கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்பாடு செய்து இருப்பாகவும் மாஸ்க் ஸ்டூடியோஸின் நிர்வாக இயக்கு நரான திரு கார்த்திக் அழகப்பன் கூறினார்.
இந்தப் பட்டிமன்றத்தில் ஏறத்தாழ 1,000 பார்வை
யாளர்கள் கலந்துகொள்வார் வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. https://sg.bookmyshow.com/e/sukisiva என்னும் இணையப்பக்கத்துக் துக்குச் சென்று நுழைவுச் சீட்டுகளை வாங்கலாம்.
நுழைவுச்சீட்டுகள் $35, $45, $55, $65, $75, $85, $105, $135 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன. அதுமட்டும் அல்லாமல், ஏப்ரல் 23ஆம் தேதிக்கு முன்னர் நுழைவுச் சீட்டுகளை வாங்குவோருக்கு 15 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

