இன, சமய வேறுபாடின்றி நோன்புத் துறப்பு

சபிதா ஜெய­கு­மார்

பல சம­யத்­தி­னர் ஒன்­று­கூடிய வசதி குறைந்த பிள்­ளை­க­ளுக் கான நோன்பு துறக்­கும் ‘இஃப்தார்’ நிகழ்ச்சி சென்ற புதன்கிழமை நடை­பெற்­றது.

‘ஹோப் இனி­ஷி­யேட்­டிவ் அலை­யன்ஸ்’ எனும் இலாப நோக்கமற்ற அமைப்­பின் ‘ஷோவிங் கேர் டுகெ­தர்’ எனும் சம­யங்­க­ளுக்கு இடை­யி­லான நட­வ­டிக்கை ஏற்­பாட்­டுப் பிரிவு இந்­நி­கழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்தது.

இதில் அறு­ப­துக்­கும் மேற்­பட்ட பிள்­ளை­க­ளுக்கு நோன்­புப் பெரு­நாள் நன்­கொ­டை­யும் விளை­யாட்டுப் பொருள்­களும் அன்­ப­ளிப்புப் பைகளும் வழங்­கப்­பட்­டன. அப்­பிள்­ளை­கள் ‘தி ஆல்­ஃபா­பெட் புரொ­ஜெக்ட்’ எனும் முழுமை­யான ஆத­ரவு திட்­டத்­தின் புதுப் பய­னா­ளி­கள்.

ரம­லான் மாதத்­தில் ஏற்­படும் செல­வு­க­ளைச் சமா­ளிக்க ஏது­வாக அவர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு சிறப்பு அன்­ப­ளிப்­புப் பைகளும் ‘என்­டி­யுசி’ பற்­றுச்­சீட்­டு­ களும் வழங்­கப்­பட்­டன.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் பிடோக் சமூக சேவை அலு­வ­ல­கத்­தின் ஆதர வில் இரா­ம­கி­ருஷ்ணா மிஷன் வளா­கத்­தில் இந்த நோன்­புத் துறப்பு நிகழ்ச்சி இடம்­பெற்­றது.

“இந்து நண்­பர்­க­ளுக்கு நோன்பு துறப்பு விருந்­த­ளிப்­பது இதுவே முதல் முறை,” என்று குறிப்­பிட்­டார் சிங்­கப்­பூர் அனைத்து சமய அமைப்­பின் தலை­வ­ரான டெர்ரி கீ.

வசதி குறைந்த பின்­ன­ணி­யில் இருந்து வரும் எங்­க­ளைப் போன்ற குடும்­பங்­க­ளுக்கு இது போன்ற திட்­டங்­கள் பேரு­தவி யாக இருப்­ப­தாக திரு­வாட்டி சமியா பிந்தி ரோஹானி தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!