சிங்கப்பூர் மரபுடைமை விழாவில் சிலம்பக்கலை

சிங்கப்பூர் மரபுடைமை விழாவில் சிலம்பக்கலை

2 mins read
83934797-1e6b-4c77-b9b5-d79576a73dd6
-

அனுஷா செல்­வ­மணி

தமிழ் தற்­காப்­புக் கலை­களில் ஒன்­றான சிலம்­பத்­தின் பாரம்­ப­ரி­யத்­தை­யும் அதன் அடிப்­படை நுணுக்­கங்­க­ளை­யும் பொது­மக்­கள் அடுத்த மாத இறு­தி­யில் நடக்­க­வி­ருக்­கும் பயி­ல­ரங்கு மூலம் அறிந்­து­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூர் மர­பு­டைமை விழாவை ஒட்டி களரி பயிற்­சிக் கழ­கம் ஏற்­பாடு செய்­துள்ள இந்­தப் பயி­ல­ரங்கு அனைத்து வய­தி­ன­ரை­யும் ஈர்க்­கும் வகை­யில் அமை­ய­வுள்­ளது. பல தலை­முறை­க­ளாக வெவ்­வேறு பரி­ணா­மங்­கள் எடுத்­துள்ள இந்­தக் கலை­யின் சிறப்பு மக்­க­ளுக்­குக் கொண்டு சேர்க்­கப்­படும்.

விளை­யாட்­டு­களும் சிங்­கப்­பூர் பொதுப் போக்­கு­வ­ரத்­தின் வர­லாற்­றை­யும் கொண்­டா­டும் வித­மாக 20வது முறை­யா­கத் திரும்­பி­யுள்ள சிங்­கப்­பூர் மர­பு­டைமை விழா­வில் இவ்­வாண்டு 80க்கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­கள் இடம்­பெ­ற­ உள்­ளன.

பொது­மக்­கள் சிங்­கப்­பூர் மர­பை­யும் பண்­பாட்­டை­யும் நினை­வுக்­கூ­ரும் விதத்­தில் மர­பு­டை­மைப் பாதை­கள், பயி­ல­ரங்­கு­கள், சுற்­று­லாக்­கள், கண்­காட்­சி­கள் முத­லி­ய­வற்­றோடு புதி­தா­கச் சேர்க்­கப்­பட்­டுள்ள கருத்­த­ரங்­கி­லும் கலந்­து­கொள்­ள­லாம்.

விழா நிகழ்ச்­சி­க­ளைத் திட்­ட­மிட்­ட­வர்­களில் ஒரு­வ­ரான யோக­ம­லர் தியா­க­ரா­ஜன், "பொது­மக்­கள் இந்­நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வ­தன் மூலம் நமது நாட்­டின் மரபை ஆழ­மாக அறிந்­து­கொள்­ள­லாம். அதோடு சிலம்­பம் போன்ற நம் தமி­ழர் தற்­காப்­புக் கலை­யில் அடங்­கி­யுள்ள அம்­சங்­களை இது­போன்ற நிகழ்ச்­சி­களில் காணும் வாய்ப்பை நாம் நழுவ விடக்­கூ­டாது," என்­றார்.

ஈராண்­டு­க­ளாக களரி பயிற்­சிக் கழ­கத்­தில் சிலம்­பக் கலை­யைக் கற்­று­வ­ரும் பிரி­ய­தர்­ஷினி ராம­நா­தன், 39, "சாதா­ரண நாள்­களில் நமது கலை­யைப் பற்றி அறிந்து­கொள்ள நேரம் இல்­லா­மல் போனா­லும் இந்த விழா மூலம் பொது­மக்­கள் குறிப்­பாக நம் தமி­ழர்­கள் தெரிந்­து­கொள்ள முன்­வ­ரு­வது சிறப்­பாக இருக்­கும்," என்று கேட்­டுக்­கொண்­டார்.

மே 1 முதல் 28 வரை நடக்­க­வி­ருக்­கும் சிங்­கப்­பூர் மர­பு­டைமை விழா நிகழ்ச்­சி­கள் குறித்த மேல்­வி­வ­ரங்­க­ளுக்­கும் முன்­ப­தி­வுக்­கும் www.sgheritagefest.gov.sg என்ற இணைப்பை நாட­லாம்.