உழைத்துக்களைத்த தொழிலாளர்களுக்கு 'ஜீடாஸ்' எனப்படும் சிங்கப்பூர் ரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம் மூன்றாவது ஆண்டாக நோன்பு துறப்பு நிகழ்வு ஒன்றுக்குக் கடந்த 15ஆம் தேதியன்று ஏற்பாடு செய்திருந்தது.
வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் கூடும் பள்ளிவாசல்களில் ஒன்றான மஸ்ஜித் அல் ஃபிர்தெளஸ் பள்ளிவாசலில் நடந்த இந்த நோன்பு துறப்பில் முன்னாள் நாடாளுமன்றச் செயலாளர் திரு அம்ரின் அமீன் கலந்துகொண்டார்.
வெளிநாட்டு ஊழியர் சகோதரர்களுக்காக அவர்கள் கூடும் இடத்திற்கே சென்று இவ்வாறு உதவுவது சிறப்பான சேவை என்று கூறிச் சங்கத்தினரின் முயற்சியைப் பாராட்டினார் அவர்.
ஜீடாஸ் தலைவர் முஹம்மது பிலால், செயலாளர் ரஃபி அஹமது, துணைச் செயலாளர் அப்துல் ரஷீத், பொருளாளர் ஜஹபர் சாதிக் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
செய்தி/படம்: ஏற்பாட்டுக்குழு

