ஆரஞ்­சுடீ விழாக்கால பராமரிப்பு 2023 மூலம் உற்சாகம், மகிழ்ச்சி

ஆரஞ்­சுடீ விழாக்கால பராமரிப்பு 2023 மூலம் உற்சாகம், மகிழ்ச்சி

2 mins read
cd27c116-8bc1-4a89-9587-fac379ab67fb
-

ஆரஞ்­சுடீ­யின் சொத்து முக­வர்­கள் எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூடிய மக்­க­ளுக்­காக ஒன்­றி­ணைந்து $21,000 திரட்­டி­யுள்­ள­னர்.

நோன்­புப் பெரு­நாள் பண்­டிகை கால கொண்­டாட்ட உணர்ச்­சியை அனை­வ­ருக்­கும் கொண்டு சேர்ப்­ப­தோடு, சமூக அக்­க­றை­யு­டன் அனை­வ­ருக்­கும் உத­வும் நோக்­கத்­து­டன் இத்­திட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இம்மாதம் 16ஆம் தேதி­யன்று 'ஹார்ட்­பீட் எட் பிடோக்' வளா­கத்­தில் 'ஆரஞ்­சுடீ ஃபெஸ்டிவ் கேர் 2023' எனும் நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டது. கிட்­டத்­தட்ட 1000 குடும்­பங்­கள் இத்­திட்­டத்தால் பய­ன­டைந்­த­னர்.

பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து நிதி திரட்­டும் 'ரே ஆஃப் ஹோப்­'பு­ட­னும் சமய நல்­லி­ணக்க ஆர்வலர் அமைப்­பான 'ரோசஸ் ஆஃப் பீஸு­'ட­னும் இணைந்து இந்த இயக்­கத்தை ஆரஞ்­சுடீ நடத்தியது.

ஃபெஸ்டிவ் கேர் என்ற இந்த இயக்­கத்­திற்­காக பள்­ளி­கள், அடித்­தள அமைப்­பு­கள், சமூக அமைப்­பு­கள் என பத்து பய­னா­ளர் அமைப்­பு­க­ளு­டன் ஒன்­றி­ணைந்து வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உதவ ஏற்­பாட்­டா­ளர்­கள் முன்­வந்­த­னர்.

அரிசி, எண்­ணெய், சீனி, பேரிச்­சம்­ப­ழம் என $30 மதிப்­புள்ள உணவுப் பொருள்கள் கொண்ட அன்­ப­ளிப்புப் பை ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் வழங்­கப்­பட்­டது.

விலை­வா­சி­கள் அதி­க­ரித்து வரும் இக்­கா­ல­கட்­டத்­தில் இந்தக் கூட்டு முயற்சி வசதி குறைந்­தோ­ருக்கு நிச்­ச­யம் மிக உத­வி­யாக அமை­யும்.

இந்­நி­கழ்ச்­சிக்கு சிறப்பு விருந்­தி­ன­ராக தொடர்பு, தக­வல் மற்­றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் வருகை புரிந்­தார்.

"ஐந்து ஆண்­டு­க­ளாக நடப்­பில் உள்ள இந்த இயக்­கத்தை நாங்­கள் தொடர்ந்து ஒவ்­வோர் ஆண்­டும் இன்­னும் பெரிய அள­வில், கூடு­த­லா­னோ­ருக்கு பய­ன­ளிக்­கும் வகை­யில் நடத்­தும் நோக்­கம் கொண்­டுள்­ளோம்," என்று ஆரஞ்­சுடீ­யின் மூத்த துணை இயக்­கு­நரான திரு பஜு­ரு­தீன் மரைக்­கா­யர் கூறி­னார்.

"வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்ற ஒரே நோக்­கத்­து­டன் பல இன, சமயத் தொண்­டூ­ழி­யர்­களும் வெவ்­வேறு பங்­கு­தா­ரர்­களும் இந்த நிகழ்ச்­சி­யில் இணைந்து நிதித்­தி­ரட்டு, தள­வா­டம், விநி யோ­கம் உள்­ளிட்­ட­வற்­றுக்கு உத­வி­யுள்­ள­னர்," என்று ரோசஸ் ஆஃப் பீஸ் நிறு­வ­ன­ரும் முன் னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முகம்­மது இர்­ஷாத் தெரி­வித்­தார்.

செய்தி: கரு­ணா­நிதி துர்கா