உலகத் தொழிலாளர் நாளாம் மே திங்கள் முதல்நாளில் கவிமாலை பயிலரங்கு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
கவிஞர் மகுடேசுவரன் நடத்தும் அப்பயிலரங்கில் கலந்துகொள்ள, முதலில் பதிவு செய்யும் ஐம்பது பேர்க்கே வாய்ப்பளிக்கப்படும்.
சிராங்கூன் சாலையில் உள்ள சந்திரமகால் உணவகத்தின் இரண்டாம் தளத்தில் மே 1ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை அப்பயிலரங்கு நடைபெறும்.
கவிதையும் இலக்கணமும் என்ற தலைப்பினில் நம் தமிழ்மொழி சார்ந்த பல அறியாச் செய்திகளை அறிந்துகொள்ள எல்லோர்க்கும் நல்லதொரு வாய்ப்பு என்றும் கூறுகிறது கவிமாலை அமைப்பு.
பின்வரும் இணைப்பினில் சென்று உங்கள் பெயரினைப்பதிவு செய்துகொள்ளலாம். https://tinyurl.com/yx6af5nh.
பயிலரங்கத்தில் பங்கேற்க ஐந்து வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும்.

