'உலகமும் நாமும்'

'உலகமும் நாமும்'

1 mins read

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் தமி­ழ­வேள் நற்­பணி மன்­றம் "உல­க­மும் நாமும்" என்ற தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பா­ணி­யின் 120வது பிறந்­த­நாள் விழாவுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

தமிழ்மொழி விழாவை ஒட்டி இடம்­பெ­றும் இவ்­வி­ழா­விற்கு சமூக இலக்­கிய இதழ் செம்­மொழி­யும் 'லீட்ஸ்' குழு­ம­மும் ஆத­ர­வ­ளிக்­கின்­றன.

நாளை காலை 10 மணிக்கு 'ஸூம்' இணைய ஊட­கத்­தின் வழி இடம்­பெ­றும் நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொள்­கி­றார் முன்னாள் நியமன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் துணைத் தலை­வ­ரு­மான முனை­வர் திரு ஆர். தின­க­ரன்.

விழா­வில் சிறப்பு பேச்­சா­ளர்­களாக வாஷிங்­டன் தமிழ்ச் சங்­கத்தின் முன்னாள் தலை­வ­ரும் வட அமெ­ரிக்­கத் தமிழ்ச் சங்­கப் பேரவையின் முன்னாள் செய­லா­ள­ரு­மான வாஷிங்­டன் சிவா, பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ரின் பேத்தி டி.எஸ்.கே. மயூரி, சக்தி நஞ்­சுண்­டன், முனை­வர் பட்ட ஆய்­வா­ளர் திரு ஜெ.கார்த்­திக் ஆகி­யோர் பங்­கேற்­கின்­ற­னர்.

வெவ்­வேறு நாடு­களில் இருந்து அனை­வ­ரும் இணை­யத்­தின் வழி இணைந்து தலைப்பை ஒட்டி கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­னர்.

Zoom Meeting ID: 814 3082 6474; Passcode: 989076

செய்தி: சபிதா ஜெயகுமார்