கிளிகள் தனிமையில் வாடாமல் இருக்க இதுவரை மேற்கொள்ளப்படாத முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்திய மூன்று மாத ஆய்வில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் 18 கிளிகள் கண்காணிக்கப்பட்டன.
இக்கிளிகளுக்கு தொடுதிரை மூலம் காணொளி அழைப்பு செய்யப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்மூலம் கிளிகள் அவற்றுக்கு இடையே காணொளி அழைப்பு மூலம் தொடர்புகொள்ளலாம்.
இந்த நடவடிக்கையின் மூலம் கிளிகளிடையே இருந்த தனிமை உணர்வு குறைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கிளிகள் என்னென்ன செய்கின்றன என்பதை காட்டும் காணொளிப் பதிவுகளை ஆராய்ந்த பிறகு, இந்தப் புதிய அணுகுமுறை கிளிகளுக்கு நன்மையைப் பயக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளிகள் கூட்டம் கூட்டமாக வாழும் விலங்கினம் என்று அவர்கள் கூறினர்.

