தமிழ் முரசின் 'முரசு மொழிபெயர்ப்பு' பயிலரங்கு

தமிழ் முரசின் 'முரசு மொழிபெயர்ப்பு' பயிலரங்கு

1 mins read

ஆ. விஷ்ணு வர்­தினி

செய்­தி­கள் எழு­த­வும் துல்­லி­ய­மாக மொழி­பெ­யர்க்­க­வும் இளை­ய­ர்களுக்கு வழி­காட்­டும் நோக்­கில் ஏற்­பா­டா­கி­யுள்ள தமிழ் முர­சின் 'முரசு மொழி­பெ­யர்ப்பு' பயி­ல­ரங்கு வரும் சனிக்­கி­ழமை (ஏப்­ரல் 29) நடைபெறுகிறது. தமிழ் முர­சின் ஆசிரியர்கள், செய்தியாளர்க் குழுவைச் சந்­திக்­க­வும் இளை­யர்கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இப்­ப­யி­ல­ரங்கு தொடர்பு தக­வல் அமைச்­சின் தேசிய மொழி­பெ­யர்ப்­புக் குழு­வின் ஆத­ர­வில் தமிழ்மொழி விழா­வின் அங்­க­மாக ஏற்­பா­டா­கி­உள்­ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தோ பாயோ நார்த்­தில் அமைந்­துள்ள எஸ்­பி­எச் மீடியா வளா­கத்­தில் பயிலரங்கு நடைபெறுகிறது.

பயிலரங்கில் பங்கெடுப்பவர்களுக்கு மொழி­பெ­யர்ப்பு, செய்தி ஆகி­ய­வற்­றின் பல்­வேறு கூறு­க­ள் அறி­மு­கப்­ப­டுத்தப்படும்.

நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு, கருத்­துகளைப் பரி­மா­றிக்­கொண்டு, தனிப்­பட்ட வழி­காட்­டு­தல் பெறு­வ­தற்­கும் இளை­யர்களுக்கு இப்­ப­யி­ல­ரங்கு வாய்ப்­ப­ளிக்­கும். தமிழ் முர­சின் அலு­வ­ல­கத்­தில் செய்­தித்­தா­ளின் பின்­ன­ணி­யில் உள்ள இயக்­கங்­

க­ளை­யும் பங்­கேற்­பா­ளர்­கள் நேரடி­யாகக் காண­லாம்.

பல­துறைத் தொழிற்­கல்­லூரி, தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கம், தொடக்­கக் கல்­லூரி, பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றில் பயி­லும் மாண­வர்­களும் தேசிய சேவை­யா­ளர்­களும் 35க்கும் உட்­பட்ட இளை­யர்­களும் பயி­ல­ரங்­கில் கலந்­து­கொள்­ள­லாம்.

பதிவு செய்ய tinyurl.com/tmtranslation படி­வத்தை நாட­லாம். அனை­வ­ருக்­கும் அனு­மதி இல­வ­சம்.