தமிழ்மொழி விழா 2023ன் நிறைவாக கவிமாலையின் 'சுடர் தந்த தேன்' எனும் நிகழ்ச்சி நடைபெறஇருக்கிறது.
இம்மாதம் 30ஆம் தேதி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.
மாணவர்களின் இசைநிகழ்ச்சி, நடனம், நாடகம், போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பொதுப்பிரிவினர்க்கும் பரிசளிப்பு, இளங்கவிஞர் தங்கமுத்திரை விருது, கணையாழி விருது எனப் பல அங்கங்கள் இதில் இடம்பெறவிருக்கின்றன.
சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன் கலந்துகொள்கிறார்.
நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராக தமிழகத்தில் தனித்தமிழ் சார்ந்து தீவிரமாக இயங்கி வரும் மொழியறிஞரும் கவிஞருமான திரு. மகுடேசுவரன் கலந்து கொள்கிறார்.
"இலக்கணத்தின் பேரழகு" என்ற தலைப்பில் அவர் உரைஆற்றுவார்.
வளர்தமிழ் இயக்கத்தின் துணைத்தலைவர் ஜோதி மாணிக்கவாசகம் இவ்வாண்டுத் தமிழ்மொழி விழாவின் நிறைவுஉரையை ஆற்றுவார்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

