வெயிற்காலத்தில் நீரிழிவு மோசமாகலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

வெயிற்காலத்தில் நீரிழிவு மோசமாகலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

2 mins read
d93c41a4-e399-49cc-862b-1d7bcab04e26
-

இவ்­வாண்டு கோடைக்­கா­லத்­தில் உல­கின் பல பகு­தி­க­ளை­யும் வெயில் வாட்டி வரு­கிறது. அத­னால், பகற்­பொ­ழு­தில் வெளி­யில் செல்­வ­தைத் தவிர்க்­கும்­படி மக்­கள் அறி­வு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­னர்.

குறிப்­பாக, நீரி­ழிவு பாதிப்பு இருப்­போர் வெயில் காலத்­தில் கவ­ன­மாக இருக்­கும்­படி மருத்­து­வர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.

அதிக வெப்­பம் உட­லின் சர்க்­கரை அள­வில் எதிர்­மறை பாதிப்பை ஏற்­ப­டுத்­த­லாம் என்­கி­றார் இந்­தி­யா­வின் குரு­கி­ரா­மில் உள்ள சிகே பிர்லா மருத்­து­வ­ம­னை­யின் உள்­ம­ருத்­து­வப் பிரிவு தலைமை ஆலோ­ச­கர் டாக்­டர் துஷால் தயாள்.

"சுற்­றுப்­புற வெப்­ப­நிலை அதி­க­மாக இருந்­தால் அதி­க­மாக வியர்க்­கும். இப்­படி இருக்­கும்­போது, தண்­ணீ­ரை­யும் குறை­வாக அருந்­தி­னால் உட­லில் நீர்ச்­சத்து குறை­யும். இத­னால் ரத்­தம் செறி­வ­டைந்து, சர்க்­க­ரை­யின் அளவு அதி­க­மா­கும். வெப்­பத்­தின் தாக்­கம் நீடிக்­கும் பட்­சத்­தில், கார்ட்­டி­சால், வாசோ­பி­ரஸ்­ஸின் போன்ற சுரப்­பு­நீர் அதி­க­மா­கச் சுரந்து, ரத்­தத்­தில் சர்க்­க­ரை­ அளவை அதி­கப்­ப­டுத்­தி­விடும்," என்று டாக்­டர் துஷார் விளக்­கி­னார்.

வெயில் நேரத்­தில் நீரி­ழிவு பாதிப்­பு­டை­யோர், அது இல்­லா­தோ­ரை­விட விரை­வில் நீர்ச்­சத்தை இழந்­து­வி­டக்­கூ­டும் என்­றார் நீரி­ழிவு குறித்து விழிப்­பு­ணர்­வூட்டி வரும் 'தி ஹெல்த் பேன்ட்ரி' நிறு­வ­ன­ரும் ஊட்டச்­சத்து வல்­லு­ந­ரு­மான குஷ்பு ஜெயின் திப்­ர­வாலா.

ரத்­தத்­தில் சர்க்­கரை அள­வைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க ஒரு­வர் சில பழக்க ­வ­ழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­கி­றார் டாக்­டர் துஷார்.

"இள­நீர், மோர், எலு­மிச்­சைச் சாறு கலந்த நீர், தர்­பூ­சணி, பப்­பாளி, மாம்­ப­ழம், ஆரஞ்­சுப் பழம், தயிர், கீரை­களும் பச்­சைக் காய்­க­றி­களும் கலந்த சாறு, வெள்­ளரி, தக்­காளி போன்­ற­வற்றை உண­வில் சேர்த்­துக்கொள்ள வேண்­டும்," என்­றும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.

"ஒரு­நா­ளைக்­குக் குறைந்­தது இரண்டு லிட்­டர் நீர் அருந்­து­வது உட­லின் நீர்ச்­சத்­தைக் குறை­ய­வி­டா­மல் பார்த்­துக்­கொள்­ளும். வெள்­ள­ரிக்­காய், தர்­பூ­சணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்­சத்து நிறைந்த பழங்­களை அல்­லது காய்­க­றிக் கல­வைச் சாற்றை அருந்­த­லாம்," என்று திரு திப்­ர­வாலா கூறி­னார்.

அத்­து­டன், கோடைக் காலத்­தில் மது அருந்­து­வ­தும் உட­லில் நீர்ச்­சத்­தைக் குறைத்து, ரத்­தச் சர்க்­கரை அளவை அதி­க­ரித்­து­வி­டும்.

சர்க்­க­ரை­, பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு, காப்பி, தேநீர் ஆகியவற்றைக் குறைத்­துக்­கொள்ள வேண்­டும். காலை­யில் அல்­லது வெயில் தணிந்­த­பின் மாலை­யில் உடற்­பயிற்சி செய்­வது நல்­லது.